முதுகில் குத்துவார்கள்

நஜீப்    

நன்றி: 27.09.2026 ஞாயிறு தினக்குரல் 

அரசியல் யாப்புத் திருத்தத்துக்கு எதிராக வியாழக்கிழமை கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சஜித் அணியில் தேர்தல் கூட்டணியில் இருப்பவர்கள் பலரைக் காணவில்லை. மழையில் நனைந்தால் சாலி பிடித்துவிடும் என்ற நியாயத்தை அனேகமாக தனித்துங்கள் முன்வைக்கக் கூடும்.

இன்னும் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஐமச. காரர்களுக்கு மட்டும் என்று ஒரு அறிவிப்பு வந்ததால் நாம் தவிர்த்துக் கொண்டோம், என்றும் தப்பிக்க ஒரு வாய்ப்பும் இருக்கின்றது. ஒகே, நமது வார இதழ் அச்சாகிக் கொண்டிருக்கின்ற நேரம் 22வது யாப்புத் திருத்தத்துக்கான வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கும்.

அல்லது முடிந்திருக்கும். அதிலும் எதிர்க் கட்சித் தலைவருக்கு சகாக்கள் பலர் ஆப்பு வைத்திருப்பார்கள். இன்னும் பலர் நேரம் பார்த்து காணாமல் போய் இருப்பார்கள். காரணம் அதிகாரத்தில் இருப்போருடன் குடித்தனம் நடத்துவதுதான் சிலரது தொழில். அனுவை எப்படி பகைப்பது!

Previous Story

MEDAL STANDINGS 2026 ASIAN GAMES AS OF SEPTEMBER 27,2026 7 P.M|2026 ASIAN GAMES MEDAL STANDINGS

Next Story

ගම්පහ දැන්... | Anura Kumara Dissanayake