நஜீப்
நன்றி: 27.09.2026 ஞாயிறு தினக்குரல்
ஈஸ்டர் தாக்குதலுக்;குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது தெரிந்ததே. ஆனால் இந்த வழக்குத் தீர்ப்புகள் பற்றி குழப்பமான நிலை அல்லது புரிந்து கொள்ளாமலே பெரும்பாலானவர்கள் இருக்கின்றார்கள்.
நாம் அறிந்தவரை இன்னும் மூன்று டசன் வரையிலான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இன்று தீர்ப்பு வந்திருக்கின்ற வழக்கு கோட்டா காலத்தில் போடப்பட்டது.
பிரதான சூத்திரதாரிகள் என்று நம்பப்படுகின்றவர்களின் வழக்குகள் இன்னும் ஆரம்பமாகவே இல்லை. புரிதலுக்காக ஒரு உதாரணத்தை இங்கு தருகின்றோம். இன்று தண்டனை பெற்றிருக்கும் ஆதம்லெப்பைவை (கபூர் மாமா) எடுத்துக் கொள்வோம். அவருக்கு மேலும் பல வழக்குகள் இருக்கின்றன.
அத்துடன் தாக்குதல் தொடர்பான பல வழக்குகள் கண்டி கொழும்பு புத்தளம் மட்டக்களப்பு கம்பஹா கல்முனை நுவரெலிய கேகல்லை மாவனெல்ல ஹம்பாந்தோட்டை போன்ற நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன.




