நஜீப்
நன்றி:23.08.2026 ஞாயிறு தினக்குரல்
ஏதாவது ஒரு தகவலை வைத்துக் கொண்டு நாட்டில் இனவாதத்தை கிளறிவிடலாம் என்று எதிர்பார்க்கின்ற இனவாதிகள் நிறையவே நாட்டில் இருக்கின்றார்கள். அவர்களுக்கென்று அரசியல் கட்சிகள் அரசியல்வாதிகள் கடும் போக்கு மதவாதிகளும் ஊடகங்களும் இருக்கின்றன.
அவற்றைப்பாவித்து இவர்கள் நாட்டைகத் தீ மூட்டி விட எதிர்பார்த்து வருகின்றார்கள். வடக்கு-பலாய் கண்ணகிபுரத்தில் ஒரு தனியார், கட்டத்தை காட்டி அங்கு புலிகள் முகாம்களை அமைத்து தயாராகிறார்கள் என்ற சங்கீத்தை அரசு பிடித்து உள்ளே தள்ளி இருக்கின்றது.
தனது சொந்த வளவில் ஒருவர் தையல் நிலையத்தை அமைத்து டசன் கணக்கானவர்களுக்கு அதில் தொழில் வழங்கி இருக்கின்றார். அதனைத்தான் அங்கு புலிகள் முகாம்களை அமைத்து ஆயுதப் பயிற்சி துவங்கிவிட்டார்கள் என்று கதை கட்டி இருக்கின்றார்கள்.
யாருடைய தேவைகளுக்காக இவை நடக்கின்றது.? இந்த அரசு மீது பேரின மக்கள் மத்தியில் அவப்பெயரை உண்டு பண்ணுகின்ற ஒரு ஏற்பாடுதான் இந்த நாடகம்.





