நான்  பொம்மை ஜனாதிபதி!

நஜீப்

நன்றி:23.08.2026 ஞாயிறு தினக்குரல்

ஐதேக. சிரிகொத காய்ந்து கிடக்கின்ற நாட்களில் கட்சிக்காக காசை அள்ளிக் கொட்டியவன் நான். ரணில் ஜனாதிபதியானதும் எனக்கு மாகாணசபை ஆளுனர் பதவி தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்.

நானும் அதனை நம்பினேன். நாட்கள் செல்லச் செல்ல அந்த பதவி எனக்குக் கிடைக்கவில்லை. இது பற்றி கேட்டால் தான் ஜனாதிபதி கதிரையில் இருந்தாலும் தீர்மானங்களை எடுப்பது பசில்தான் என்று ரணில் தன்னிடம் கூறினார்.

மைத்திரியும் ஜனாதிபதியாக இருந்த போது மத்திய மாகாணத்துக்கு என்னை ஆளுனராக நியமிப்பதாக கூறினார். பின்னர் கிருஸ்தவரான என்னை நியமனம் செய்தால் நெருக்கடி வரும் என்றார் மைத்திரி.

இந்தக் கதையை சொன்னவர் தொழிலாளர் கட்சித் தலைவர் ஏ.எஸ்.பி.லியனகே.  ஆளுனர் பதவி பற்றி நான் தேடிப்பார்த்த போது துமிந்த, தயாசிரி போன்றவார்கள்தான் தனக்கு அந்தப் பதவி  கிடைக்காமல் தடுத்திருக்கின்றார்கள்.

லியனகேவுக்கு மஸ்தான் என்ற நாடாளுமன்ற உறுப்பினரும் இருக்கின்றார்.

Previous Story

மனிதப் புனிதர் அம்பேத்கர்!

Next Story

විසිදෙක ගැන විනිසුරුවෙකුගෙන් දැනගමු..හිටපු විනිසුරු සාලිය පෙරේරා