மனிதப் புனிதர் அம்பேத்கர்!

நஜீப்

நன்றி:23.08.2026 ஞாயிறு தினக்குரல்

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (1891-1956) தனது மகர் இன தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கடைசி வரை போராடிய புனிதர். இன்று தமது இனத்தின்-குலத்தின் சார்பில் கட்சிகள் சமைத்து வியாபாரம் செய்பவர்கள் மத்தியில் அம்பேத்கர் வாழ்க்கையை சற்றுப்பாருங்கள்.!

இராமபாயை அவர் 9 வயதில் மணந்தார். தனது கணவன் மேற்படிப்புக்காக கொலம்பியாவில் இருந்த நேரத்தில் அவரது மூன்று குழந்தைகள் மரணித்து விட்டன.

இந்தச் தகவல் கணவணுக்குத் தெரிந்தால் படிப்பை கைவிட்டு இடையில் நாடு திரும்பி விடுவார் என்ற அச்சத்தில் அந்த இறப்புக்களைக்கூட மனைவி மறைத்துக் கொண்டார்.

கணவன் கற்கப் போன இடத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால் சானம் சேகரித்து அதில் வறட்டி தயாரித்து விறகுக்கு விற்று மனைவி பிள்ளைகளை வளர்த்திருக்கின்றார். அவரும் தனது 29 வயதில் மரணித்திருக்கின்றார்.

அம்பேத்கரின் ஐந்து குழந்தைகள் வறுமையாலும் நோய்களாலும் மரணித்தன. இந்திய அரசியல் யாப்பையே உருவாக்கியவரும் இந்த மா மனிதர் தான்.

Previous Story

පල්ලේගමගේ ක#ටුකාපු වැඩබලන අනුරාධපුර OIC ට උසාවියෙන් වැඩ ව#රදියි !

Next Story

நான்  பொம்மை ஜனாதிபதி!