நஜீப்
நன்றி 22.11.2026 ஞாயிறு தினக்குரல்
தான் ஜனாதிபதியாக இருந்த நாட்களில் ரணில் பேசிய ஒரு ஜனரஞ்சகமான வார்த்தைதான் 2048வரைக்கும் ஏதும் பண்ண முடியாது.
சம்பள அதிகரிப்புக்கள் ஏதும் அரசாங்கத்தால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
1948க்கு பின்னர்தான் நாட்டுக்கு மீட்சி கிடைக்கும். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று பகிரங்கமாக கேட்டிருந்தார் ஜனாதிபதி ரணில்.
அதே போன்று அவர்களின் பொருளாதார விட்பண்ணர்-அன்றைய நிதி அமைச்சர் பந்துல குணவர்தன ஐந்து சதம் கூட சம்பள அதிகரிப்பை தன்னிடம் எதிர்பார்க்க வேண்டாம்.
அதற்கான வாய்ப்பேகிடையாது. தான் யதார்த்தத்தையே இங்கு பேசுகின்றேன் என்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இதனை தொழிலாளர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
இந்தக் கருத்தை வெளிவிவகார அமைச்சர் விஜிதவும் நாடாளுமன்றில் நினைவூட்டினார்.
ரணில்-பந்துல அப்படி பேசிக்கொண்டிருக்க அடுத்த வருடம் அதிகாரத்துக்கு வந்த அனுர அரசு 2025-2026-2027என தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பை செய்துகொண்டு வருகின்றது.




