நஜீப்
நன்றி 22.11.2026 ஞாயிறு தினக்குரல்
1.அக்கரையில் ஒரு விழாவுக்கு பிரதமர் ஹரினி அழைக்கப்பட்டிருந்தார். அதிதியைவிட நகர முதல்வருக்கு அதிக மாலைகள் சூடி பிரதமரை சில்லறைகள் சிறுமைப்படுத்தியதாக சர்ச்சை.!
2.அமெரிக்க அதிபர் ட்ரம்பை சீன அதிபர் விமான நிலையம் வரை சென்று வரவேற்றதில் மிகப் பெரிய திருவிளையாடலொன்றை சீ சிங்பிங் அங்கு செய்து முடித்திருக்க வேண்டும்.!
3.பிமலுடன் மோதி மூக்குடைந்த மு.கா.தலைவர் தான் விட்டது ஜோக் என்று சமாளித்தார். நாடாளுமன்றம் அதற்கான இடமல்ல. ஜோக்கை வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.-பிமல்.!
4.விமல் மனைவி சசி மற்றும் பொது பலசேனா செயலாளர் ஞானசார தேரர்களுக்கு நல்லாட்சி காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் மேல் முறையீட்டிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.!
5.ஈஸ்டர் தாக்குதல்தாரி சஹ்ரான் ஹசீமுக்கும் அவனது சகாக்களுக்கும் கடைசி வரை அரச உளவுத்துறை தொடர்ந்து சம்பளம் வழங்கி வந்திருப்பதை ஒரு பதிவில் பார்க்க முடிந்தது.!
6.வன்னி மஸ்தான் கிழக்கிலும் தனது அரசியலை விஸ்தரிக்கப்போவதாக அறிவிப்பு. பணம் பாதாளம் மட்டும் பாயும் போது கிழக்கு எம்மட்டு. தாராளமாக பாய்ந்து பார்க்கட்டும்.!
7.வரலாற்றில் முதல் முறையாக சீன ரஸ்ய அமெரிக்க தலைவர்கள் சீனாவில் சந்திப்பு. நல்லது நடந்தால் ஓகே. நாடுகளை பங்கீடு செய்து கொள்வது எப்படி என்று பேசி இருப்பார்களோ.?





