காது குத்துகின்ற கோட்டா!

நஜீப்

நன்றி: 12.07.2026 ஞாயிறு தினக்குரல் 

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition  Gotabaya will return in August: Bandula He is not hiding in Singapore

கோட்டாவின் அந்தரங்கச் செயலாளர் சுவிஸ்வர பண்டா தற்போது சட்ட விரோதமாக இரு சம்பளம் வாங்கிய குற்றச்சாட்டில் தடுப்புக்காவலில் இருக்கின்றார்.

இது தொடர்பில் முன்பு கொடுத்திருந்த வாக்குமூலத்துக்கு மாற்றமான ஒரு கதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஸ நீதிமன்றில் கொடுத்திருந்தார்.

முதல் வாக்குமூலத்தில்  சுவீஸ்வர அந்த சம்பளத்தை பாவிக்காது வேறும் ஒரு திட்டத்துக்கு அதனைச் செலவு செய்திருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வாரம் நீதிமன்றில் அதற்கு மாற்றமாக சுவீஸ்வர சம்பளத்தை நாம் மற்றுமொருவருக்கு பதிவுகள் ஏதும் இல்லாமல் அதனைக் காசாகக் கொடுத்தோம் என்றார்.

நீதிபதி அப்படி பணம் வாங்கிவரிடம் ஏதாவது பதிவுகளை வைத்திருக்கின்றீர்களா என்று கேட்க இது வரை அப்படிச் செய்ய முடியாமால் போய்விட்டது என்று கோட்டா பதில் கொடுத்திருக்கின்றார்.

சுவீஸ்வர பணம் பெற்றார். இல்லை அவர் பெறவில்லை. மற்றுமொருவர்தான் வாங்கினார். இது காது குத்தும் கதை.!

Previous Story

மெனிக் ஆச்சி யோசித-யசாரா!