குரல் தரும் குறுஞ்செய்திகள்!

நஜீப்

நன்றி: 12.07.2026 ஞாயிறு தினக்குரல் 

1.சரித் அபேசிங்ஹ அரக்கட மனைவியிடம் எடுத்த 12 கோடியில் ஒரு கோடியை சஜித்தின் ஐமச.வுக்கு கொடுத்தார். இல்லை என்று சொல்லலாமா-கௌசல்யா MP சபையில் கேள்வி.

2.அண்மையில் ஒரு சர்வதேச பதிவின்படி தற்போது தலா வருமானம் 5000 டொலரை கடந்த நாடுகள் 1.இலங்கை. 2.டோகோ 3.பிலிபைன் 4.வியட்னாம். 5.ஜோர்டான். (இந்தியா 2813.டொலர்.)

3.உலகில் ஒட்டிப் பிறந்த குழந்தைகள் நூற்றுக்கணக்கில் இருக்க 20 வரையானவர்களுக்கே வெற்றிகார சத்திர சிகிச்சை நடந்துள்ளது. பேராதனையில் இதிலொன்று அடக்கம்.

4.உங்கள் கடந்த கால தவறான நடவடிக்கைகளை இன்றிலிருந்தாவது கைவிட்டு நல்ல மனிதர்களாகி விடுங்கள். படைத் தரப்பினருக்கு ஜனாதிபதி அனுர கடைசி வேண்டுகோள்.!

5.எங்கும் மோசடி.பீபாவும் தப்பவில்லை. தற்போது நடந்து வரும் போட்டிகளில் பல முறைகேடுகள். டரம்ப் கூட அதில் நேரடியாடித் தலையிட்டு தீர்ப்பை  மாற்றினார். என்ன கொடூரம்.!

6.மனைவியின் பட்டமளிப்புக்குப் போன ரணிலின் நிதி மோசடி தொடர்பில் அவரைக் காப்பாற்றி முன்னாள் உயர் ஸ்தானிகர் சரோஜா சிரிசேனாவை பலிகொடுக்கத் திட்டமாம்.!

7.2022 ஜூலை 9ம் நாள். இந்த நாட்டு மக்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கோட்டாபே ராஜபக்ஸாவை  விரட்டியடித்து அன்றுடன் நான்கு வருடங்கள் கடந்து விட்டது!.

Previous Story

පාරෙන් ගෙනා දුම්රිය මාස 7කට පස්සේ පළමුවරට රේල් පාරෙන් ළඟාවූ ස්ථානය

Next Story

මිනීමරු රාජපක්ෂ පවුල සමග එකතු නොවූ යසාරා ඔබ වාසනාවන්ත දරුවෙක්