நஜீப்
நன்றி: 12.07.2026 ஞாயிறு தினக்குரல்
ராஜபக்ஸாக்களின் வழக்குகள் சங்கிலித் தொடர்போல நகர்ந்து வருகின்றன. தேசிய ஆச்சி மெனிக் மல்ல-பொதி பற்றிய கதைகள் நாட்டு மக்களுக்குப் புதிரல்ல.
இந்த மாணிக்கப் பொதியை விற்று மஹிந்த மகன் யோசித வளவு-வீடுகள் வாங்கிய வழக்கு கடந்த வியாழன் துவங்கி இருக்கின்றது.
அதில் சாட்சி சொல்ல யசோர அபேநாயக்க அழைக்கப்பட்டிருக்கின்றார். யாரிந்த யசாரா என்று நீங்கள் யோசிக்கக் கூடும். நமது கட்டுரைகளைக் கூர்மையுடன் படிக்கின்றவர்களுக்கு அவரை தெரிந்திருக்கும்.
இவர் யோசிதவின் முன்னாள் காதலி. திருமணத்தின் பின் கூடிவாழ யசாரா யோசிதவுடன் இந்தக் காணி வளவு வாங்க சம்பந்தப்பட்டார். (பின்பு உறவு முறிந்தது.)
அதனால் அவரை நீதிமன்றம் அழைத்தது. இந்த யசார நடிகர் காமினி பொன்சேக்காவின் பேத்தி. அவர் தற்போது கண்டியில் ஜனரஞ்சக ரகர் வீரர் பாசில் மர்ஜாவுடன் பந்தத்தில் இணைந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.




