கற்பனையல்ல நிஜக் கதை

நஜீப்

 நன்றி:30.08.2026 ஞாயிறு தினக்குரல்

பொதுவாக ஆட்சியாளர்கள் வசதி வாய்ப்புள்ளவர்களாகவும் பிரபுக்களாகவும் இருக்கின்ற சம்பிரதாயங்களைத்தான் நாம் பார்த்திருக்கின்றோம். அதிகாரத்துக்கு வந்து ஜம்மிதார் வாழ்க்கைக்கு பிரவேசித்த குடும்பங்களையும் மனிதர்களையும் நாம் நாட்டில் பரவலாக பார்த்திருக்கின்றோம்.

நாடாளப்போவது என்பதே சொத்து சேகரிக்கவும் தமது சந்ததியினர்களின் வசதி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்கின்ற ஒரு நுழைவாயிலாகத்தான் நமது நாடாளுமன்றம் கடந்த காலங்களில் செயல்பட்டது.

நமது இந்தக் கருத்துக்களை மக்கள் நிராகரிக்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம். இதற்கு முற்றிலும் மாற்றமான ஒரு வரலாறு கடந்த வெள்ளி ஊவாவில் பதிவாகி இருக்கின்றது.

ஆம் தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் லயன்களிலே வாழ முகாம்களில் இருந்த அவர்களின் சமூக மக்களுக்கு வசதியான வீடுகளை மலையக-பூனாகலையில் ஜனாதிபதி கையளித்து அதிரடி ஏற்படுத்தினார்.

கிருட்ணன் மற்றும் அம்பிக்க போன்ற மக்கள் பிரதிநிதிகள் இன்றும் சேரியில்தான் வாழ்கின்றார்கள். இது கற்பனையல்ல நிஜக் கதை!

 

Previous Story

சீருடை அரசியல் யதார்த்தங்களும் முரண்பாடுகளும்!

Next Story

දෙරණ TV Wada Pitiya වැඩසටහන