ராகுலின் சூறாவளி எச்சரிக்கை

நஜீப்

நன்றி: 24.05.2026 ஞாயிறு தினக்குரல் 

வருகின்ற நாட்களில் வரலாற்றில் என்றுமில்லாத அளவில் இந்தியாவில் பெரிய பொருளாதாரப் சூறாவளி வீசப்போகின்றது. இதனால் பெரிய அழிவுகள் நடக்கும். இப்படி எச்சரித்து வருகின்றார் காங்கிரசின் முக்கியஸ்தரான ராகுல் காந்தி.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஈரான் அமெரிக்க இஸ்ரேல் நெருக்கடிகள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது என்பதும் குறிப்படத்தக்கது.

ஆனால் இங்கு போலத் தான் இந்தியாவில் மோடி அரசின் மீது என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் அது வலுவாகத்தான் இருக்கின்றது என்பது நமது கணக்கு.

அதே நேரம் பெற்றோல் மற்றும் சிலிண்டர் விலை ஒரு வாரத்தில் பலமுறை அதிகரித்ததால் மோடி அரசுக்கு எதிராக எதிரணியினர் இப்போது போராட்டங்களை நடாத்திக் கொண்டு வருகின்றார்கள்.

கடைசியாக சில தினங்களுக்கு முன்னர் பெற்றோலியப் பொருட்களின் விலை முன்நூறு ரூபாவுக்கும் மேல் அதிகரிதிருக்கின்றது. ட்ரம்ப் பார்க்கின்ற வேலையால் உலகம்பூரவும் கொதி நிலை.

Previous Story

சுமந்திரன் மீது குற்றச்சாட்டு

Next Story

அரசு - எதிரணி - குடி மக்கள் நடப்பது என்ன?