எகிறிய கச்சா எண்ணெய் விலை!
ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மற்றும் போர் நிறுத்த முயற்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். துருக்கியின் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ (NATO) உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “என்னைப் பொறுத்தவரை, ஈரானுடனான அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது. அவர்களுடன் இனி எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவர்கள் மோசமானவர்கள் மற்றும் குணப்படுத்த முடியாதவர்கள்,” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது “நேரத்தை வீணடிக்கும் செயல்” என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஜூன் 17-ம் தேதி பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கையெழுத்தான ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’, இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த சில நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்தியதாக சொல்லப்படும் தாக்குதல்கள் இந்த ஒப்பந்தத்தைச் சிதைத்துள்ளன. தற்போதைய நிலைமை ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவம் ஈரானில் உள்ள 80-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் எண்ணெய் விற்பனை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமத்தை அமெரிக்க ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை ஈரான் மீறியுள்ள நிலையில், அமெரிக்காவின் பதிலடி மிகவும் அவசியமானது என்று அவர் கூறியுள்ளார்.
ஈரானால் இனி எழும்பவே முடியாது.. சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தக லைசென்ஸை ரத்து செய்த டிரம்ப்! போச்சே கச்சா எண்ணெய் விலை உயர்வு போர் நிறுத்த முயற்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை எகிறியிருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) ஒரு பேரல் 76 டாலராகவும், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் 72 டாலராகவும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள ராணுவ மோதல்களே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.




