பெரிய தலை சிறு மூளை!

நஜீப்

நன்றி: 31.05.2026 ஞாயிறு தினக்குரல்  

சர்ச்சைக்குறிய கருத்துக்களை வெளியிடுவதில் சமகாலத்தில் திஸ்ஸ குட்டிக்குத் தனி இடம் இருந்து வருவதை நாம் அறிவோர். இலங்கை அரசியலில் தற்போதய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது நிறையவே நம்பகத் தன்மையற்ற கருத்துக்கள் கட்சிக்கு வெளியேயும் உள்ளேயும் பேசப்பட்டு வருவதை நாம் பார்த்து வந்திருகின்றோம்.

தற்போது எதிர் கட்சிகள் அரசுக்கு எதிராக நாடாத்தி வருகின்ற கூட்டங்கள் சந்திப்புக்களைக் கூட சஜித் தவிர்த்து வருகின்றார். நமது பார்வையில் அதில் ஒரு நியாயமும் யதார்த்தமும் இருக்கின்றது. ஆனால் இதனை என்ன கணக்கில் சஜித் தவிர்க்கின்றார் என்பது எமக்குத் தெரியாது.

இந்த நிலையில் மொட்டு முக்கியஸ்தரான திஸ்ஸகுட்டி சஜித்துக்கு அரசியல் முதிர்ச்சி கிடையாது. மனிதனுக்கு பெரிய தலை இருந்தாலும் உள்ள மிகச் சின்ன ஒரு மூளைதான் இருக்கின்றது. அதனால் அவரால் ஏதும் சாதிக்க முடியாது. இது குட்டியின் விமர்சனம்.

Previous Story

පාස්කුවත් වාස්පවෙලා , රහස්‍ය ප්‍රකාශ සියල්ල සලේට දීලා

Next Story

BBC Tamil TV News