நஜீப்
நன்றி:30.08.2026 ஞாயிறு தினக்குரல்
நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் அதிரடியான ஒரு உரையை கடந்த புதன் கிழமை நீர்கொழும்பு பெரியமுல்ல அல்ஹிலால் தேசிய கல்லூரி மீலாத் உரையில் அவதானிக்க முடிந்தது.
அதில் நாட்டில் இனவாதம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அரச சேவை வலுப்படுத்த வேண்டும். பாதாள போதைக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும். 22 அரசியல் திருத்ததில் உறுதியான நிலைப்பாடு, நான் குடிகளின் நலனுக்கான திட்டங்களை எடுத்தாலும் அதனை எதிர்க்கும் ஒருதரப்பு நாட்டில் இருப்பதை அனைவரும் அறிவோம்.
எனது நடவடிக்கைகளில் தவறுகள் இருந்தால் அவற்றை திருத்திக் கொள்ள நான் தயாராக இருக்கின்றேன். எனக்கு குடிமக்கள் மீது மிகுந்த விசுவாசம் இருக்கின்றது.
மக்கள் நலனுக்கான நாம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளில் பின்வாங்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
ஜனாதிபதி அனுர உரை மக்களுக்கான ஒரு அழைப்பாகவே தெரிந்தது.





