நஜீப்
நன்றி:30.08.2026 ஞாயிறு தினக்குரல்
சுரேஸ் சாலேக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல். அவருக்கு கருணை காட்டுமாறு ஜனாதிபதிக்கு தொடர்ச்சியான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருக்கின்றன.
தடுப்புக்காவலில் இருக்கின்ற சலே சாட்சிகளை சொல்வதற்குப் பதிலான தனக்கு இருக்கின்ற சின்னச் சின்ன வியாதிகளை பூதாகரமாக்கி அவற்றுக்கு வைத்தியம் பார்த்து வருகின்றார்.

இருதய நோய் என்று சிகிச்சை பெற்று வருபவர் உடலில் இருக்கின்ற ஒவ்வொரு உறுப்புக்காகவும் சிகிச்சை பெறுகின்றார். கடைசியாக பூச்சி அரித்த மூன்று பற்களை நிரப்பி வருகின்றார்.
தனது கடமைக்குரிய கடவுச் சீட்டில் சில பக்கங்கள் மட்டுமே அவர் ஒப்படைத்திருக்கின்றார். ஏனைய பக்கங்களை அவர் மறைப்பதற்கான மர்மம் என்ன? ஏனைய பக்கங்களுக்கு என்ன நடந்தது?
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சுஷர்சனி ஹேரத் சுரேஸ் இந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை அவர் தவிர்த்து வருவதாக நீதிமன்றில் குற்றம்சாட்டி இருக்கின்றார்.





