நஜீப்
நன்றி:30.08.2026 ஞாயிறு தினக்குரல்
மாகாணசபைத் தேர்தல் எங்கே என்ற கோஷத்துடன் எல்லை பிரிப்பு வட்டாரத்துக்கு பிரதிநிதித்துவம் மகளிர் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் என்ற பங்குகள் பற்றிய கேள்விகளும் வருகின்றன.
கடந்த ஒன்பது வருடங்களாக மாகாணசபை நடைபெறவில்லை. விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை மாற்றிய கடந்த ஆட்சியாளர்கள் புதிய எல்லைகளை வகுக்காமல் விட்டதுதான் அடிப்படைப் பிரச்சினை.
எல்லை பிரிப்பு என்று வரும் போது அங்கே இனக் குழுக்கள் குலங் கோத்திரங்களின் பிரதிநிதித்துவம் என்றும் உரிமைப் போராட்டங்கள் ஆரம்பிக்கும்.
அனைவரும் சேர்ந்து பழைய முறைக்கு போவோம் என்ற குரல்களுடன் அப்படியானால் இருந்ததை ஏன் ஐயா கவிழ்த்து விட்டீர்கள் என்று கேட்கத் தோன்றுகின்றது.
அன்று எல்லை நிர்ணயம் பற்றிய அமர்வுகளில் நாமும் ஒரு அரசியல் குழு மற்றும் ஊடக அமைப்பு சார்பில் எல்லை நிர்ணய குழுமுன் வாக்குமூலம் கொடுத்தோம். அதற்கு என்ன நடந்ததோ தெரியாது.





