விமல் மீண்டும் பல்டி!

-நஜீப்-

மக்கள் புரட்சி கொடிகட்டிப் பறந்த நேரங்களில் அதற்கு வாழ்த்தும் வர்ணனையும் செய்தவர்கள் இப்போது ரணில் ஜனாதிபதியானதும் போராட்டக்காரர்கள் மீது அதிரடி நடடிவக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போது தலைகீழாக பேசுவதை அவதானிக்க முடிகின்றது.

இப்படித்தான் துருக்கியில் செல்வாக்கான அதிபர் எர்துவான் வெளிநாடு சென்றிருந்த போது அவருக்கு எதிராக சதிப் புரட்சியொன்றை சிலர் மோற்கொண்டனர். ஆனால் நாட்டுக்குள்ளே அந்தப் புரட்சிக்கு எதிரான போராட்டங்கள் துவங்கியது.

நாடு திரும்பிய எர்துவான் தனக்கு எதிராக சதியில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானவர்களை  கைது செய்து சிறையில் தள்ளினார். தற்போதும் எர்துவான் ஆட்சி அங்கு தொடர்கின்றது.

அது போன்றுதான் தற்போது புரட்சிக்கு புகழ்பாடியவர்கள் இன்று பல்டியடித்து அரச ஆதரவாலர்களாக மாறி நாடகமாடுகின்ற ஒரு நிலை நாட்டில் காணப்படுகின்றது.

ஜனாதிபத் தேர்தலில் டஸசை ஆதரித்த விமல் தரப்பினர் போராட்டக்காரர்களை அடக்குவதற்கு அரசு கொண்டு வந்த பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருக்கின்றார்கள். எனவே இவர்கள் டலஸூக்கு வோட்டுகப் போட்டார்களா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டிருக்கின்து.

நன்றி:31.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

யாரிந்த தனீஷ் அலி!

Next Story

UK: பிரதமர் வாய்ப்பு: லிஸ் ட்ரஸ் 90%,   ரிஷி சுனக் 10% -