குரல்தரும் குறுஞ் செய்திகள்

நஜீப் 

நன்றி: 15.03.2026 ஞாயிறு தினக்குரல்

1.இந்தியா பெற்றோலியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி. ஜனாதிபதி அனுர கேட்டால் நிச்சயம் நமக்கும் அனுமதிதான். துரதிஸ்டம் நமக்கு கப்பல்கள் கிடையாதே.!

2.ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சுரேஸ் சாலே, சராவை கொல்ல பலமுறை முயன்றார். நீதி மன்றில் வாக்குமூலம்.!

3.ஈரான் விவகாரத்தில் ஐமச. அணிக்குள் முரண்பாடான கருத்துக்கள் பேசப்படுவதால் கட்சிக்குள் கடுமையான கருத்து முரண்பாட்டால் தலைவர் சஜித்துக்கு நெருக்கடி!

4.இலங்கைக்கு அண்மையில் ஈரான் கப்பலை போரில் ஒரு சுவாரஸ்யத்துக்காகவே தாக்கினோம். கென்டாக்கியில் நடந்த ஒரு வைபவத்தில் அதிபர் ட்ரம்ப் விட்ட கதை.!

5.நியமிக்கப்பட்டிருக்கின்ற குழு மூன்று மாதங்களில் அறிக்கை தந்தால் உடன் மாகாணசபைத் தேர்தலாம்-திணைக்களம். அப்போ நாம் சொன்னபடி ஜூலையில் தேர்தல்!

6.ஈஸ்டர் தாக்குதல்தாரி சஹ்ரான் பர்தா-முகமூடி உடையணிந்து பெண்கள் போல நடமாடி இருப்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்திருக்கின்றது.!

7.ஈஸ்டர் தாக்குதல்: கடுவாப்பிட்டிய தேவாலயத் தாக்குதலுக்கு தேலையான தகவல்களை இராணுவ உளவுப்  பிரிவினரே அவர்களுக்கு கொடுத்தார்களாம்!

Previous Story

அமெரிக்க போர்க்கப்பல் தாக்கப்பட்டதா? ஈரானின் திட்டம் என்ன?

Next Story

ෆොන්සේකා සලේ ගැන කට අරී ! ගෝඨාගෙන් රාත්‍රියේ ආ දුරකථන ඇමතුම සමගින් අමුත්තෙක් එයි