வாராந்த அரசியல் (14.01.2024)

-நஜீப்-

ரணில்-ஹூதி மோதல் ஏதற்காக!

Ranil clarifies Sri Lanka's Red Sea Deployment

செங்கடலில் ஹவுதிகள் இஸ்ரேலுக்கு எதிராக நடாத்துகின்ற பலஸ்தீன ஆதரவான போரில் அமெரிக்க வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை  ஜனாதிபதி ரணிலும் தனது கடற்படையை அங்கு அனுப்பி வைத்திருக்கின்றார். இந்த நடவடிக்கை உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலும் பெரும் விமர்சனத்துக்கு இலக்காகி வருகின்றது.

பொதுவாக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இந்தப் போராட்டத்தில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக நிற்க்கின்ற போது, இலங்கை ஜனாதிபதி எடுத்திருக்கின்ற இந்தத் தீர்மானம் இலங்கைக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டுமல்லது இந்தப் போராட்டத்தில் பலஸ்தீனர்களுடன் இருக்கின்ற ரஸ்யா, சீனா, தென் அபிரிக்கா, பிரேசில், போன்ற முஸ்லிம் அல்லாத நாடுகளுக்குக் கூட ஒரு வலியை ஏற்படுத்தும் என்பதும் தெளிவு.

இலங்கை ஜனாதிபதி ரணில் இப்படியாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஆதரவாக இந்தப் போராட்டத்தில் குதிப்பது, இலங்கையில் நடக்க இருக்கும் தேர்தலுக்கு ஆப்பு வைத்து அதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் பதவியைத் தொடர்ந்தும் உத்தியா இது என்ற ஒரு சந்தேகமும் நமக்கு வருகின்றது.

ஊருக்கு வரும் வியாபாரிகள்!

தேர்தல் எதிர்பார்ப்பில் கட்சிகள் மக்களிடத்தில் வாக்கு வேட்டைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. மக்களிடத்தில் பொய்களையும் புரட்டுகளையும் சொல்லித்தான் கடந்த காலங்களில் நாட்டில் வாக்கு வேட்டைகள் நடந்தன. இந்த முறை மீண்டும் அப்படி பொய்களை சந்தைப்படுத்த முடியாத ஒரு நிலை. அரசியல் ரீதியில் மக்கள் விளிப்படைந்திருப்பதால் சிங்கள சமூகத்தில் அரசியல்வாதிகள் மீது கடும் கோப நிலை.

இதனால் அவர்கள் ஒரு அரசியல் மாற்றத்துக்கு தயாராகி வருகின்றார்கள். இந்த நிலையில் சிறுபான்மை அரசியல்வாதிகள் ஊர்களுக்கு வந்து எதனை சந்தைப்படுத்த முடியும்.? தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவதாகச் சொன்னவர்கள். இப்போது பேரினத் தலைமைகள் தீர்வு தராது என்பதனை அவர்களே பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.

தனித்துவ முஸ்லிம் தலைவர்கள் தமது சமூகத்துக்கு அரசியல் விமோசனம் பெற்றுத் தருவதாகச் சொல்லி வந்து போட்ட கூத்துக்ள், காசுக்காக அடித்த பல்டிகள். அதற்கு தலைமைகள் காட்டிய பச்சைக் கொடி. அத்துடன் கடத்தல்கள் மோசடி வியாபாரங்கள். இதனால் தனித்துவம் மூக்குடைபட்டு நிற்க்கின்றது. மலையக தலைமைகளும் கையாளாகாத நிலை.

இந்த பின்புலத்தில் வோட்டு வேட்டைக்கு வரும் தனித்துவ வியாபாரிகள், இந்த சுற்றில் நமக்கு சொல்லப் போகும் புதுக் கதைகள் என்னவாக இருக்க முடியும்.?

ரணிலிடம் அணுர கேள்வி!

JVP Leader turns his guns on Ranil – The Island

மக்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் அசாதாரணமாக வரிகளைச் சுமத்தி இன்று அவர்களை பெரும் நெருக்கடிகளுக்கு இலக்காகி இருகின்ற ஆட்சியாளர்கள் இப்போது ரிஐஎன் (TIN) என்ற புதிய வரிக் கோவை ஒன்றை அணைத்து பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் விதித்து அவர்களுக்கு வரியைக் கட்டயப்படுத்தி வருகின்றார்கள்.

அதே நேரம் 614,364,869,67 பில்லியன் பண மோசடிகள் நாட்டில் 2005 முதல் 2021வரை நடந்திருக்கின்றது. இவ்வாறான கொள்ளையர்களை கண்டு கொள்ளாமலும் அவர்கள் மீது நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் எடுக்காது இருப்பது ஏன் என்ற கேள்விவை அணுரகுமார ஒரு ஊடகச் சந்திப்பில் ஏழுப்பி இருக்கின்றார். இது என்ன நியாயம்?

இப்படிப்பட்ட மோசடிக்கரர்கள் அனைவரும் போல ஆட்சியாளர்களின் கையாட்களாக இருந்து அவர்களுக்கு துணை நிற்பவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலையும் அந்த ஊடகச் சந்திப்பில் அணுர பகிரங்கப்படுத்தி இருந்தார்.

மேலும் வங்கிகளில் அவர்கள் பெற்றுக் கொண்ட ஆயிரக் கணக்கான கோடி பில்லியன் பணத்தை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் வங்கிகள் திவலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனைத்தான் ரணில் இப்போது அப்பாவி குடிமக்கள் தலையில் சுமத்திய இருக்கின்றார் என்பது அணுர வாதம்.

மூக்குடைந்த தனித்துவ தலைமைகள்!

Opposition Leader Sajith meets President Ranil

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் தனித்துவத் தலைவர்கள் இருவர், மற்றும் மலையகத் தலைவர்கள் இருவரை தன்னை வந்து சந்திக்குமாறு ஜனாதிபதி ரணில் கேட்டிருக்கின்றார். அவர்களும்  சஜித்திடம் சொல்லிவிட்டு அங்கு போய் இருக்கின்றார்கள்.

அப்போது ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணி சமைக்கின்ற தனது விருப்பத்தை ரணில் தெரிவிக்க, இந்த நான்கு தனித்துவத் தலைவர்களும் ரணில் சொன்ன செய்தியை எடுத்துக் கொண்டு ஆர்வத்துடன் சஜித்திடம் போய், ரணில் ஜனாதிபதி பிரதமர் சஜித் என்ற ரணில் விருப்பத்தை அங்கு சொல்ல, நெருப்பாகிய சஜித் இப்படிப் பட்ட ரணில் கதையை எடுத்துக் கொண்டு தன்னிடம் வர வேண்டாம்.

உங்களுக்கும் இங்கு இருக்க முடியாவிட்டால் நீங்கள் வெளி போவது தொடர்பில் தனக்கு எந்த ஆட்சேபனைகளும் கிடையாது என்று சஜித் கண்ணத்தில் அறைவது போல தனித்துவத்தார்கள் முகத்திற்கே சொல்லி விட்டார். இதனால் ரணில்-சஜித் கூட்டணி கதை பிளாஸ்ட்! சஜித்தால் வருகின்ற தேர்தல்களில் தனித்து வெல்ல முடியாது என்ற நம்பிக்கையில்தான் மேற்சொன்ன தலைவர்கள் ரணிலை சஜித்துடன் இணைக்க முனைகின்றார்கள் என்றும் ஒரு தகவல்.

மஹிந்த உதயாவை திட்டியது ஏதற்கு!

Udayanga would return on my request: MR | ONLANKA News

நாம் உதயங்க வீரதுங்ஹ தந்த சில தகவல்களை இந்த வாராந்த அரசியல் பகுதியில் முன்பு சொல்லி இருந்தோம். வீரத்துங்ஹ சொல்லி இருந்த பல தகவல்கள் மொட்டுக் கட்சி மற்றும் ராஜபக்ஸாக்கள் மட்டுமல்லாது ஜனாதிபதி ரணிலுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதனால் உதயங்க வீரதுங்ஹவுக்கு  தொலைபேசியில் தொடர்பு கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸா, ‘உதயங்க இது என்ன வேலை? ஏன் இப்படி நடந்து கொள்கின்றீர்கள். ஏதற்காக இந்த தகவல்களை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தினீர்கள். என்று கடும் கோபத்தில் மஹிந்த தொலைபேசியல் உதயாவைத் கண்டிந்திருக்கின்றார்.

ஐயா நான் எந்தப் பொய்களையும் சொல்லவில்iயே என்ற அவர் கூறியபோது, அதனைப் பகிரங்கமாக சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல என்று மஹிந்த உதயங்கவுக்குச் சுட்டிக் காட்டி இருக்கின்றார். அத்துடன் ஜனாதிபதி ரணிலை இப்படிக் கடுமையாக விமர்சிப்பது நமக்குப் பொருத்தமில்லை என்றும் மஹிந்த அவரிடத்தில் கூறி இருக்கின்றார்.

அப்போது ரணிலால் தனக்கு என்னதான் நலவுகள் நடந்திருக்கின்றன என்றும் அவர் அண்ணன் மஹிந்தவிடம் திருப்பிக் கோட்டிருக்கின்றார்.

நன்றி: 14.01.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சாமானிய பெண்ணை மணக்கிறார் புருணே இளவரசர் !

Next Story

அயோத்தியில் மசூதி கட்ட நிலம் ஒதுக்கியும் பணி துவங்காதது ஏன்?