நஜீப்
நன்றி 25.10.2026 ஞாயிறு தினக்குரல்
சமூக ஊடகங்கள் மட்டுமல்ல சர்வதேச ஊடகங்கள் கூட தப்புத் தப்பாக செய்தி சொன்ன கதைதான் வங்க ஜோடிகளுக்கான மரணதண்டனை.
இவர்கள் புனித கடமையை நிறைவேற்ற சவுதி போன கணவன் மனைவி. கர்ப்பமான மனைவியை பாசத்தால் முத்தமிட்டதாகவும் கதைகள். இது பற்றிய உண்மையை பார்ப்போம்.
இந்த உடலுறவு சம்பவம் 2023 நவம்பரில் நடந்தது. நஸ்ருஸ் இஸ்லாம் வயது 23. திருமணமாகாதவர். சுத்திகரிப்பு தொழிலாளி. பெண் சித்தி அக்தர் ஏற்கெனவே திருமணமானவர். அவருக்கு நான்கு வயதில் ஒரு பெண்; குழந்தையும் இருக்கின்றது.
புனித தளத்தில் உடலுறவு நடப்பதை இந்திய முஸ்லிம் இளைஞன் ஒருவன்தான் வீடியோ எடுத்திருக்கின்றான். அவனுக்கும் வயது 23.
அதனை வைத்து இந்தப் பெண்னை அவனும் உடலுறவுக்கு அழைக்க அவள் நிராகரித்த கோபத்தில் அவன் வீடியோவை வெளியிட்டிருக்கின்றான்.
அவனும் தற்போது சிறையில். இதனை சவுதி வங்க அரசுகளும் குறிப்பிட்ட குடும்பத்தார்களும் உறுதி செய்கின்றார்கள்.





