யாரிந்த மொகமட் இல்யாஸ்?

-நஜீப்-

நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல்

அண்மையில் நாட்டில் நடந்த மிகப் பெரும் மனிதப்படுகொலையாக ஈஸ்டர் தாக்குதல் அமைந்தது. முழு உலகமுமே ஒரு கனம் அதிர்ந்து போனது. அப்பாவி மக்கள் ஏன் இப்படி கொல்லப்பட்டார்கள் என்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும். அதிகார வெறியில்தான் இத்தாக்குதல் நடந்திருக்கின்றது என்று கதை.

இது தொடர்பாக இரகசிய பொலிசார் 747 பேரை கைது செய்தனர். அதில் 100 பேர்வரைக்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 14 பேருக்கு அதிகுற்றச்சாட்டு வழக்குகள் முன்வைக்ப்பட்டுள்ளது. 26 பொலிசார், 7 இராணுவ அதிகாரிகள், 3 சிறை அதிகாரிகள், சிவிலியன்கள் பலபேர் என  சாட்சிகளாக விசாரிக்கபட்டு வருகின்றார்கள்.

தாக்குதலில் துவான் சுரேஸ் சலே, உளவுப் பிரிவின் ஒரு குழு, சஹ்ரான் தரப்பு என்பன பங்கு என்று கருத்து. இதில் அதிரடித் திருப்பமாக தற்போது சுவிஸ்லாந்தில் இருக்கும் இல்யாஸ் என்பவர் தாமாக சாட்சியம் வழங்க இருக்கின்றார்.

அவருக்கு தாக்குதல் தொடர்பில் நிறைய தகவல் தெரியுமாம். அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்க இருக்கின்றது. பிரான்ஸ் இதற்கான ஏற்பாடுகளுக்கு உதவுமாம்.

Previous Story

தலைவர் விட்ட அண்டப்புளுகு!

Next Story

லசந்த: நீரும் நெருப்பும்!