யாரிந்த ஞானசாரர்

நஜீப் பின் கபூர்

நன்றி: 11.10.2026 ஞாயிறு தினக்குரல்

கோட்டாஞானசார உறவுபற்றி -விக்டர் ஐவன் அதிரடி!

தனி நபர்களுக்காக விதிகளை மற்றமுடியாது-ஜனாதிபதி!

Gnanasara Thero 2018 Prison Jumper Photo Is AI-Edited, From a 2012 News Photo - Fact Crescendo Sri Lanka English | The leading fact-checking website

சர்வதேச அரங்கிலும் நாடுகளிலும் அவ்வப்போது சில தனி மனிதர்கள் பேசு பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டு அவர்கள் பற்றிய செய்திகளை மக்கள் பரவலாக பேசுவதை நாம் பார்த்திருக்கின்றோம். அவர்களில் பலதரப்பட்ட செயல்பாடுகள் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அன்னை தெரேசா பற்றி உலகம் பேசிக்கொண்டிருக்கின்றது. அதே போன்று வீரப்பன் பூலான் தேவி போன்றவர்கள் பற்றியும் மக்கள் பேசுகின்றார்கள்.

மேற்சொன்னவர்களில் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று முரணாக அமைந்திருந்தாலும் அவர்கள்நினைவு கூரப்பட்டு வருகின்றார்கள். கலகொடாத்தே ஞானசார தேரரின் செயல்பாடுகள் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தாலும்  அவர்பற்றி பேசவேண்டி வருகின்றது. அந்த வகையில் நாமும் மனிதனைப் பற்றி சில தகவல்களைப்பேச முனைகின்றோம்.

Gnanasara Thera supports hijab but opposes niqab and burqa - Breaking News | Daily Mirror

தெற்கு காலி கரந்தெனிய-கலகொடாத்தே இவரது பிறப்பகம். வயது 51. ஏழாம் வகுப்பில் கல்விபயில்கின்ற போதே துறவரம் பூண்டிருக்கின்றார். இவரது இயற்பெயர் நுவன்சிரி குமார.முறையாக பிரிவேனைகளில் கல்விபயின்றாரா என்பதில் முரண்பாடுகள்.அவைபற்றி நாம் இங்கு பேசவரவில்லை. சில காலம் இவர் ஆசிரியராகவும் தொழில்பார்த்து வந்திருப்பதாகவும் பதிவுகள் இருக்கின்றன. தனது கடும் போக்கு நடவடிக்கைளினாலே இவர் அறியப்பட்ட ஒரு பாத்திரமாக பிரபல்யமானார்.

அத்துடன் நாட்டில் இருக்கின்ற சம்பிரதாய பௌத்த தலைமைகளாக அஸ்கிரிய-மல்வத்த பீடங்களையும் விஞ்சி இவர் கட்டளைகளைப் பிறப்பித்த சந்தர்ப்பங்களும், அந்த சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பிட்ட பீடங்கள் மௌனம் காத்து பார்வையாளர் நிலையில்இருந்தும்வந்திருக்கின்றன. குறிப்பாக ஞானசார தேரர் தமிழ் முஸ்லிம் கிருஸ்தவ சமூகத்தினருக்கு எதிரானதனது வன்முறைக்கருத்துக்களை வெளியிட்டு வந்தது மட்டுமல்ல நேரடியாக களத்தில் இறங்கி வன்முறைகளிலும் ஈடுபட்டும் வந்திருக்கின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக சட்டத்துக்குக் கூட கட்டுப்படாத ஒருவராகத்தான் இவரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன.Gnanasara Thero 2018 Prison Jumper Photo Is AI-Edited, From a 2012 News Photo - Fact Crescendo Sri Lanka English | The leading fact-checking website

பொதுவாக இவர் ராஜபக்ஸாக்களின் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டி வந்திருக்கின்றார். அதற்காக இவருக்கு பிரதி உபகாரங்கள் கிடைத்து வந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

இந்த நாட்டில்வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்கள் ராஜபக்ஸாக்கள் மீது நல்லெண்ணம் இல்லாத ஒரு நிலையில் அவர்களை அச்சுறுத்தி அடக்கி வைப்பதற்காகத்தான் இந்த ஞானசார தேரர் பாவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.

அதிகாரத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்களுக்குத் துணைபுரிவதற்காகவும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக அமைப்பு ரீதியில் சிங்கள சமூகத்தை ஏவி விடுவதற்காகவும் இவர் 2012ல் பொது பல சேனா அமைப்பைத் தோற்றுவித்தார்.அமைப்பின் செயலாளர் நாயகம் பதவி வகித்து பேரின சிங்கள சமூகத்தின்காவலராகவும் இவர் தன்னை காட்டிக் கொண்டார்.

Gnanasara Thero brought before court again | Sri Lanka News | Ada Derana | Truth First

ராஜபக்ஸாக்களைத் தொடர்ந்தும் அதிகாரக் கதிரையில் வைத்திருப்பதற்காக பாதுகாப்புத் தரப்பிலும் குறிப்பாக உளவுத்துறையிலும் ஒரு பிரிவு செயல்பட்டு வந்திருக்கின்றது. அதற்கு அதிகாரத்தில் இருந்த  தலைமைகளின் கட்டளைகள் பக்க பலமாக இருந்து வந்திருக்கின்றன. அதனால் பொலிஸ் மற்றும் ஏனைய படைத்தரப்பிலும் அதனை மீறி செயலாற்ற முடியாத ஒரு நிலை நிருவாகத்துறைகளில் இருந்து வந்திருகின்றன.

கோட்டா அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சட்டத்தை உருவாக்க ஞானசாரத் தேரருக்கு அதற்கான தலைமைப் பொறுப்பையும் ஜனாதிபதி கோட்டா கொடுத்து பரிவாரங்களையும் வழங்கி இருந்தார். ஞானசார நாடுபூராவும் போய் கலந்துரையாடல்களை நடாத்திக் கொண்டிருந்தார்.

கோட்டா அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னர் ஞானசார தேரர் ஆட்டமும் முடிவுக்கு வந்தது என்ற ஒரு நிலை. 2024 ஜனாதிபதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போது வேட்பாளர்கள் அனைவரையும் ஓரிடத்தில் அழைத்து அவர்களுக்கு சில உபதேசங்களை பண்ண ஞானத்தார் முயன்றார். அனுரதரப்பு அந்த அழைப்பைக் கண்டு கொள்ளவில்லை.

இப்போது இவர் சட்டத்துக்கு கட்டுப்படாத ஒரு மனிதனாக எப்படி நடந்து வந்திருக்கின்றார் என்பதனை பார்ப்போம். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த நாட்டில் என்றைக்குமே பௌத்த தேரர்களுக்கு செல்லுமிடமெல்லாம் ஏன் சட்டம் கூட விஐபி. மரியாதை இருந்து வந்திருக்கின்றன அல்லது மரியாதை கொடுக்க முற்பட்டிருக்கின்றது என்பது  நமது அவதானம்.

Court orders Gnansara thero to vacate forcibly seized luxury house - Newswire

அதே நேரம் இந்து இஸ்லாமிய கிருஸ்தவ மதபோதகர்களுக்கு இந்த மரியாதை எந்தளவுக்குக்கிடைத்தது என்பதை சற்று மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும்.!தனிப்பட்ட ரீதியில் பொது பலசேன அமைப்பின் செயலாளர் ஞானசாரருக்கு இந்த மரியாதை எந்தளவுக்கு இருந்தது என்பதனை இப்போது பார்ப்போம்.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் இவரது பெயர் உச்சரிக்கப்பட்டு வருவதையும் நாம் முன்பும் பல இடங்களில் பேசி இருக்கின்றோம்.

நீதி மன்றத்தில் ஞானசார  தேரர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இன்றும் நிலுவையில் இருக்கின்றன. ஜனாதிபதி மைத்திரி ஞானசாரத் தேருக்கு வழங்கிய மன்னிப்பு  செல்லுபடியானதல்ல என்ற தீர்மானம் காரணமாக தேரர் இன்று மீண்டும் உள்ளே போய் இருக்கின்றார்.

நாட்டில் இனமுறுகளைத் தேற்றுவிப்பதில் இவர் தீர்க்கமான ஒரு சக்தியாகஇருந்ததை உலகம் அறியும்.நீதிமன்றம் இவருக்கு விடுத்திருந்த மூன்று பிடியாணை காரணமாககளுத்துறை-தீனியாவெல என்ற இடத்திலுள்ள (ஆராமையில்) தேரர்களின் தங்குமிடத்தல் தலைமறைவாக இருந்த போது கைதானார். இந்த ஆராமை சிங்ஹராச வனப்பிரதேசத்துக்கு மிக அண்மையில் இருக்கின்றது. தேவைப்பட்டால் சிங்ஹராச வனப் பிரதேசத்துக்குள் தப்பிச் செல்வது ஞானத்தாரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்க வேண்டும்.

The Gnanasara Thero Defrocking: A Link in a Longer Chain -

தமக்குக் கிடைத்த ஒரு இரகசியத் தகவலைத் தொடர்ந்து கொழும்பில் இருந்து சென்ற அதிகாரிகள் குறிப்பிட்ட ஆராமைக்குச் சென்றுஇங்கு வந்த ஞானசார தேரர் எங்கே என சில ஆதாரங்களை காட்டி விசாரிக்க, அப்படியாரும் இங்கு வரவில்லையே என்று உளறியவர் பின்னர் ஆம் வந்தாராம் உடனே திரும்பிப் போய்விட்டாராம் என்று சொல்லி இருக்கின்றார்கள்.

அதிகாரிகள் விடவில்லை. அவர்களுக்கு குறிப்பிட்ட ஆராமையிலிருந்தான் ஞானத்தார் பற்றி தகவல்கள் போய் இருக்கின்றது என்பதும்குறிப்பிடத்தக்கது. அங்கிருந்த கூடாரங்கள்-அறைகளுக்குள் நுழைந்து சல்லடைபோட்டுத்தேடிய போது மனிதன் ஒரு கூடாரத்தில் மறைவாக இருந்தது தெரியவந்தது.

அந்த அதிகாரிகளிடம் ஐயோ என்னை விட்டு விடுங்கள் என்னால் அங்கே போய் (சிறையில்) இருக்க முடியாது.இது  உங்களுக்கும்புரியும்தானே என்று சிறு குழந்தை போலகெஞ்சியவர்,நீங்கள் எனக்குச் செய்யும் உதவிக்கு என்ன கொடுக்கல் வாங்கல்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும் என்று ஞானத்தார் தன்னை கைது செய்ய வந்தவர்களிடத்திலே நேராக சொல்லி இருக்கின்றார்.

தேரர் மீது மூன்று பிடிஆணைகள் போடப்பட்டிருந்தது. களுத்துறை செல்லும் போது பாதுகாப்புக் கருதி ஞானசார தேரர் பல வாகனங்களில் மாறிமாறி அங்கு போய் சேர்ந்திருக்கின்றார். அத்துடன் தனது சிம் காட்டையும் மாற்றி இருந்தார். பிடிபட்டதும் தான் பீடாதிபதிகளின் ஆலோசனைப்படிதான் ஓய்வெடுக்க அங்குபோய் தங்கியதாகவும் தான் ஒருபோதும் மறைந்திருக்கவில்லை என்றும்மனிதன் கதை விட்டிருகின்றார்.இவர் சிறை செல்ல என்ன காரணம் என்று இப்போது பார்ப்போம்.

2016ல் ஹோமகம நீதிமன்றில் பிரகீத் எகனலிகொட கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கை நீதிபதி ரங்க திசாநாயக்க விசாரித்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு தேரர் திடீரென எழுந்து முன்னே வந்து வெள்ளைக்காரனுடைய சட்டங்களை நாம் ஒரு போதும் ஏற்க மாட்டோம். என நீதிபதியை அச்சுறுத்தி. நாட்டுக்காக போராடிய படையினரை உள்ளே போட்டு புலிகளை எப்படி வெளியே போட முடியும்?

இது என்ன சட்டம் நீதி என்றும் அங்கு கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார். அதனை நான் தடுக்க முயன்றாலும் அவர் அடங்கவில்லை. எம்மை எச்சரித்துக் கொண்டிருந்தார். எனது நீதிபதிவாழ்க்கையில் இப்படியான ஒரு சம்பவத்துக்கு நான்முகம் கொடுத்தது இதுதான் முதன் முறை என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அரசதரப்பு சட்டத்தரணிகளை பெண்ணையர்கள் என்றும் அங்கு தேரர்இழிவாகப் பேசினார். இவர் யார் என்று நான் அறிந்திருக்கவில்லை. அப்போது பக்கத்தில் இருந்தவர்களிடம் இவர்யார் என்று விசாரித்த போது இவர்தான் கலகொடாத்தே ஞானசார தேரர் என்று எனக்குச் சொன்னார்கள்.என்று நீதிபதி ரங்க திசாநாயக்க  குறிப்பிட்டார். அப்படிப் பேசிவிட்டு அவர் துணைக்கு வந்திருந்த ஏனைய தேரர்களுடன் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இது நல்லாட்சி காலத்தில் நடந்தது. எகனலிகொட மனைவிக்கும்ஞானத்தார் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

குற்றங்களும் தண்டனையும்

1.அனுமதி இன்றி நீதி மன்றில் கருத்துத் தெரிவித்தமை. 2.நீதிமன்ற சுயாதீனத்துக்கு நீதிமன்றிலே சவால் விடுத்தமை. 3.குற்றச்சாட்டப்பட்ட இராணுவ உளவு  அதிகாரிகளை விடுவிக்குமாறு கட்டளையிடல். 4.அரச தரப்பு சிரேஸ்ட சட்டத்தரணிகளையும் ஏனையோரையும்அச்சுறுத்தியமை என்ற குற்றச்சாட்டுகள்நிரூபிக்கப்பட்டு 2018 ஜூலையில் தீர்ப்பு வந்தது.

முதலாம் இரண்டாம் குற்றச்சாட்டுக்களுக்கு தலா 4 வருடங்கள் என எட்டு வருடங்கள். மூன்றாம் குற்றச்சாட்டுக்கு 6 வருடம். நான்காம் குற்றச்சாட்டுக்கு 5 என மொத்தமாக 19 வருடங்கள் சிறைத்தண்டனை. இது ஆறுவருடங்களில் பூர்த்தியாகும். ஏழு மாதங்கள் சிறையில் இருந்த போதுதான் ஜனாதிபதி மைத்திரி ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி மனிதனை வெளியே அனுப்பினார்.

இந்த மன்னிப்பை ஏற்கமுடியாது என எகனலிகொட மனைவி சந்திய தரப்பினர் வழக்குத் தாக்கல்  செய்திருந்தனர். அதன்படிமைத்திரி மன்னிப்பு செல்லாது என்ற புதிய தீர்ப்பால் ஞானம் இன்னும் ஐந்து  வருடங்களும் ஐந்து மாதங்களும் சிறையில் இருக்க வேண்டிய நிலை. அதிலும் மாதத்துக்கு பத்து நாட்கள் தள்ளுபடி என்ற ஒரு சலுகையும் இருக்கின்றது.

அதன்படி வருடத்துக்கு 120 நாள் என்ற அடிப்படையில் ஐந்து வருடங்களுக்கு 700 நாள். ஐந்து மாதத்துக்கு 50 நாட்கள் என்ற கணக்குப்படி மொத்தம் 750 நாள் டிஸ்கவுன்ட் சலுகையால் மனிதன் இன்னும் ஒரு நான்கு வருடங்களில்  வெளியே வந்து விடுவார்.

ஆனாலும் இன்னும் சில வழக்குகளும் ஞானத்தாருக்கு நிலுவையில் இருக்கின்றன.இப்போது ஞானத்துக்கு ஜம்பர் அணிவிக்கப்பட்டிருக்கின்றது.அது சரி பிழைஎன்று விமர்சனங்கள். அதற்கு பதில் கொடுக்கின்ற அரசதரப்பு இப்படி ஜம்பர் அணிகின்ற காவிகள்-தேரர்கள் 63 இன்னும் சிறையில் இருக்கின்றாhகள்.

இதுதான் சிறை விதிமுறை என்று விளக்கம் தருகின்றார்கள். ஜனாதிபதி தனி நபர்களுக்காக தான்னால் விதிமுறைகளை மாற்ற முடியாது என்று கூறி இருக்கின்றார்.

2014ல் கோட்டாவின் நிழல் என்ற தனது கட்டுரையில் விக்டர் ஐவன் ஞானசாரதேரர் பற்றி சொல்லி இருந்த அதிரடியான கருத்துக்களை இப்போது பார்ப்போம். முஸ்லிம்கள் மீது இனவாதத்தை கிளப்பி சிங்களப் பேரின ஆதரவை தனது பக்கம் வைத்திருக்க கோட்டா சில முகவர்களை வைத்திருந்தார்.

3 Muslims killed in Buddhist mob attacks in Sri Lanka | CNN

அவர்களில் ஞானசாரதேரர் முதன்மையானவர்.அதில் சில முஸ்லிம் குழுக்களும் தனி நபர்களும் இருந்தனர். அலுத்கம சம்பவத்துக்குப் பின்னர் சர்வதேசகுற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒரு ஊடகச் சந்திப்பை ஏற்பாடு செய்யும் படியும் கோட்டா ஞானசாரரை கேட்டிருந்தார்.

அதில் தனது நடவடிக்கைகளுக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் குறிப்பாக கோட்டாவுக்கும் எந்த தொடர்புகளுமில்லை எனஞானசார வலியுறுத்த வேண்டும் என கேட்கப்பட்டிருக்கின்றது.

இராணுவ உளவுத்துறையினர் தனிப்பட்ட ரீதியில் தொலைக் காட்சி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு ஞானசார தேரர் நடாத்துகின்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டிருந்தார்கள். மேலும் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபே ராஜபக்ஸாவே நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஞானசாரதேரரின் ஊடகச் சந்திப்பை கவரேஜ் செய்ய அங்கு செல்லுமாறு கேட்டிருந்தார். சொன்னபடி ஊடகச் சந்திப்பில் ஞானசார தனக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் எந்தத் தொடர்புகளும் கிடையாது என்று அங்கு வலியுறுத்தியதுடன் அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளையும் போலியாக அங்கு விமர்சித்து தனது நாடகத்தை அரங்கேற்றிஇருந்தார்.

Bodu Bala Sena and violence in Aluthgama and Beruwala | Daily FT

இந்தத் தகவல்களை கோட்டாவின் நிழல் என்ற தனது கட்டுரையில் சொல்லி இருக்கும் விக்கடர் ஐவன்இந்த ஊடகச் சந்திப்பில் உளவுப்பிரிவினரும் கோட்டாவும் ஆர்வம் காட்டியதிலிருந்து கோட்டா-ஞானசாரர் உறவும் சதிகளும் அம்பலமாகின்றது என்று விக்டார் ஐவன் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

Previous Story

தமிழக வெற்றி கழகம் வெற்றி

Next Story

රනිල්ට තවත් නඩුවක්!?කලු ජූලිය හිස ඔසවයි!ඥාණසා