பொய் பேசாவிட்டால் கொலை!

-நஜீப்-

அண்மையில் நமது நாடாளுமன்றத்தில் வித்தியாசமான ஒரு கதையைக் கேட்க முடிந்தது. சனல் 4, ரணிலின் பாய்ச்சல் என்பவற்றுக்கு மத்தியில் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிசாட் பதியுத்தீன் ஒரு அதிரடியான கதையை நாடாளுமன்றத்தில் சொன்னர்.

அப்போது அனைவரும் வாயைப் பிளந்து அதைனைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு எவரும் முறையாக பதில் கொடுக்கவும் முன்வரவில்லை. இது ரிசாட் பதியுத்தீனின் சொந்தக் கதையும் கூட. தனக்கு எதிராக பொய்யான சாட்சி சொல்லாவிட்டால் உங்களைக் கொன்று விடுவோம் என்று சிஐடியினர் இரு மௌலவிமார்களைத் தன்முன்னே  அச்சுறுத்தினார்கள் என்ற பாரதூரமான குற்றச்சாட்டுத்தான் இது.

பொய் சொல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று உலகில் ஏதாவது நாட்டில் இப்படியான ஒரு கோரிக்கையை அரச உளவுத்துறை கேட்டிருக்குமா என்பது பற்றி எமக்குத் தெரியாது. நாம் அறிந்த வகையில் இது முதல் தடவையாக இருக்கின்றது.

இலங்கையில் நீதித்துறை மற்றும் உளவுத்துறைகள் தொடர்பாக அண்மைக் காலமாக வெளிவரும் செய்திகள் புதிய பதிவுகளாக வரலாற்றில் இடம் பெறக்கூடும் என்று கருத வேண்டி இருக்கின்றது.

நன்றி: 08.10.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கொழும்பில் விரைவில் குண்டு தாக்குதல்!

Next Story

800 விமர்சனம்: முரளிதரன் படம் வெற்றி பெற்றதா?