புதிய கூட்டணிகள் ரெடி!

-நஜீப்-

ஆளும் தரப்பு மிகவும் பலயீனப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் பிரதான எதிரணி அதனைவிட பல மடங்கு செயல்திறனற்றுக் காணப்படுகின்றது.

மொட்டுக் கட்சியின் கிளர்ச்சிக் குழுவினர் இன்று பல்வேறு குழுக்களாக பிரிந்து தனது அரசியல் இருப்பபை பாதுகாக்கின்ற முயற்ச்சியில் இறங்கி இருப்பதும் தெரிகின்றது.

\கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு எதிராகக் களமிறங்கிய டலசும் அவரது சாகக்ளும் தற்போது சஜித் அணியுடன் கூட்டணி சமைப்பது பற்றி துவக்கக் கலந்துரையாடல்களில் இறங்கி இருக்கின்றது.

மொட்டுக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜீ.எல்லைக் கூட தற்போது அந்தக் கட்சியிலிருந்து தூக்கி வீச நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

டலஸ்  அணி தொடர்ப்பில் இரு தரப்பினருக்கும் நல்ல புரிதல் இருக்கின்றது என்று சஜித் அணியில் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கின்றார். அதே போன்று விமல், வாசு, கம்மன்பில, திஸ்ஸ போன்ற சில்லறைகளும் புதிய கூட்டணி ஒன்றை அமைத்து களத்துக்கு வருவதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன.

இந்தக் கூட்டணி மக்கள் மத்தியில் எந்தளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. அரசியலில் இவர்களை ஒரு பட்சோந்திக் கூட்டமாகத்தான் நாம் பார்க்கின்றோம்.

நன்றி: 28.08.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

 இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்:  மைதானம் 'பற்றி எரிந்த' தருணங்கள்

Next Story

பாகிஸ்தானில் வரலாற்றில் இல்லாத அளவு மழை-937 பேர் உயிரிழப்பால் அவசரநிலை பிரகடனம்