நாங்கள் எதிர்பார்த்த முடிவு அல்ல-ஒபாமா 

TRUMP 295  HARRIS 226

அதிபராக தேர்வாகி உள்ள டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஆக உள்ள வான்ஸ் ஆகியோரின் வெற்றிக்கு வாழ்த்துகள். இது வெளிப்படையாக நாங்கள் எதிர்பார்த்த முடிவு அல்ல’ என அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
Latest Tamil News

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிபராக தேர்வாகி உள்ள டிரம்ப் மற்றும் துணை அதிபராக உள்ள வான்ஸ் ஆகியோரின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். இது வெளிப்படையாக நாங்கள் எதிர்பார்த்த முடிவு அல்ல. தேர்தலில் தோல்வியை சந்தித்த துணை அதிபர் கமலா ஹாரிசின் முயற்சிக்கு பாராட்டுகள்.

 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி

பிரசாரத்தில் நான் கூறியது போல், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா பல்வேறு சிக்கல்களை சந்தித்து உள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் மக்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அந்த நிலைமைகள் உலகெங்கிலும் உள்ள ஜனநாயகப் பொறுப்பாளர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. நல்ல செய்தி என்னவென்றால், இந்த பிரச்னைகள் தீர்க்கக்கூடியவை.

Obama endorses Harris for president in a whirlwind week of party support

நாம் ஒருவருக்கொருவர் செவிசாய்த்தால் மட்டுமே, இந்த நாட்டை சிறந்ததாக மாற்ற முடியும். இதற்கு, அரசியலமைப்பு கோட்பாடுகள் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மக்களுக்கு நல்ல நம்பிக்கையையும், கருணையையும் வழங்க வேண்டும். இப்படித்தான் நாம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம், அப்படித்தான் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவோம். இவ்வாறு பராக் ஒபாமா கூறியுள்ளார்.

கமலா ஹாரிசின் தேர்தல் பிரசாரத்தில் ஒபாமா பங்கேற்று, ஆதரவு திரட்டினார். ஒபாமா மனைவி மிச்செல் கமலா ஹாரிசின் இரண்டு தேர்தல் பிரசார கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

டிரம்ப் வெற்றி: ரஷ்யா, சீனா, ஈரான் சொல்வது என்ன?

Next Story

பேசும் பொருளாக மாறியுள்ளஅநுர அலை !