நஜீப்
நன்றி: 18.10.2026 ஞாயிறு தினக்குரல்
தற்போது அனுர தலைமையிலான என்பிபி அரசுக்கு எதிராக பல இடங்களில் ஒன்றுகூடல்களும் சந்திப்புக்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்தில் இருக்கின்ற அரசை வீழ்த்துவதாக இருந்தால் ஒரு மெகா கூட்டணியின் அவசியம் பற்றி உணரப்பட்டுள்ளது.
அதனால் சில கடும்போக்கு தேரர்கள் ஒன்றிணைந்து சஜித்தையும் நாமலையும் ஓரணியில் இணைப்பது தொடர்பாக ஒரு இரகசிய பேச்சுவார்த்தையை அண்மையில் சஜித்துடன் நடாத்தி இருபதாக தகவல்.
அதில் நாம் முன்பு சொல்லி இருந்த சஜித் ஜனாதிபதி நாமல் பிரதமர் என்ற எண்ணக்கரு பற்றியும் பேசப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. அதனால்தான் தற்போது மொட்டுப் பாணியில் சஜித் அணியினரும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
தேரர்களின் சஜித் ஜனாதிபதி நாமல் பிரதமர் என்ற மெகா கூட்டணிக்கு சஜித்தும் பச்சைக் கொடி காட்டி இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.





