நஜீப்
நன்றி: 18.10.2026 ஞாயிறு தினக்குரல்
ஞானசாரர் விவகாரத்தில் உறுதியானதும் தெளிவானதும் நிலைப்பாட்டில் இருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தற்போது ஒரு அடி காலை பின் நோக்கி நகர்த்தினாரா என்ற ஒரு விமர்சனம் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஞானசாரவின் காவி ஆடையைக் களைந்து அவரை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது தொடர்பாக சில தேரர்கள் ஜனாதிபதியை சந்தித்த போது தனிநபருக்காக விதிகளையும் சட்டத்தையும் மாற்ற தான் ஒரு போதும் தயாராக இல்லை என்றவர் அப்படித் தேவையாக இருந்தால் விதியை மாற்றலாம் என்ற சொல்லி அதற்காக ஒரு குழுவையும் உடனடியாக அமைத்திருந்தார்.
மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து குற்றவாளிகளாக தண்டனை அனுபவிக்கின்ற தேரர்கள் காவி உடையில் நீதிமன்றம் வரலாம் என்று இப்போது சலுகை வழங்கப்பட்டிருக்கின்றது.
இதனால் அதனை வெற்றி என்று பேசுபவர்களும் ஜனாதிபதி பின்வாங்கினார் என்று விமர்சனமும் வரும்.




