ஜனாதிபதி வீட்டுக்காவலில் – அனுரகுமார

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தலைமை அமைச்சரவையால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகர மண்டபத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பாரிய போராட்டங்கள் காரணமாக இராணுவப் பிரிவுகளை தமக்கு நெருக்கமாகக் கொண்டுவர அரச தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜபக்ச குடும்பம் நாட்டை ஆள முடியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், இராஜினாமா செய்துவிட்டு நாட்டை கட்டியெழுப்பக்கூடிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.”

இதேவேளை, பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என வலிறுயுத்தின் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இளைஞர் யுவதிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Previous Story

மருந்து தட்டுப்பாடு - சுகாதார அமைச்சர்

Next Story

ஐயோ கடவுளே இது என்ன கணக்கு! ஒரு நபர் வாழ 5992 ரூபா போதுமானது!