ஜனாதிபதி-தேரர்கள் இணக்கம்!

நஜீப்

நன்றி: 11.10.2026 ஞாயிறு தினக்குரல்

தற்போது கைது செய்யப்பட்டு உள்ளே இருக்கின்ற ஞானசாருக்கு சலுகை பற்றி பேச சில தேரர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்.

அங்கு இரு தரப்பினருக்குமிடையே சுமுகமாக பேச்சு வார்த்தை நடந்து இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது. சிலர் இது அரசாங்கத்தின் பலிவாங்கல் என்று மக்கள் மயப்படுத்த முனைகின்றார்கள்.

ஆனால் நீதி மன்ற நடவடிக்கைகளுக்கும் அரசுக்கும் எந்த தொடர்புகளும் கிடையாது. அத்துடன் சிறைச்சாலையின் வழக்கமான விதிமுறைகள்-செயல்பாடுகளை தனது இஸ்டத்துக்கு மாற்றி அமைக்க முடியாது.

தான் அப்படி செய்யவும் போவதில்லை. ஆனால் இருக்கின்ற விதிமுறைகளை சட்ட ரீதியாக மாற்றி அதற்கான புதிய விதிமுறைகள் அவசிமானால் அதனைச் செய்யமுடியும் என்றும் ஜனாதிபதி தேரர்களுக்கு விளக்கி இருக்கின்றார்.

தேரர்கள் இதனை ஏற்று கலைந்து சென்றனர்.இந்த சந்திப்பை நாம் உன்னிப்பாக அவதானித்த போது ஜனாதிபதி மீண்டும் தனது ஆளுமையை அங்கு காட்சிப்படுத்தியதை எம்மால் பார்க்க முடிந்தது.

Previous Story

சிரந்தி கைதின் பின்னணி!

Next Story

හොරෙක් රජකරවන්න පා ගමන් යන ලංකාවේ කරුමෙට උපන් |සිවුරුහොරු