குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜீப்  

நன்றி: 06.09.2026 ஞாயிறு தினக்குரல்

1.இலங்கை பொலிஸ் படை ஆங்கில ஆட்சியில் 1866ல் துவங்கியது. 160 வயது. அதற்காக பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு. ஆனால் கிரேன்ட்பாஸ் பொலிஸ் இன்றும் வாடகையில்.!

2.22வது யாப்புத் திருத்தத்துக்கு கருத்துக் கணிப்பு நடத்த ஆயிரம் கோடி செலவாகும். அரசுக்கு செலவை ஏற்படுத்தி எதிரணியினர் மக்களைத் தண்டிக்க முயல்கின்றனரா.!

3.குற்றச்சாட்டுகளில் கைதாகின்ற அரசியல் தலைவர்கள் மற்றும் விஐபி. க்களுக்கு அபூர்வமான வியாதிகள். ரவி கருணாநாயக்கவுக்கும் உடம்பில் நிறையவே நோய்களாம்!

4.கும்பிட்டு கேட்கிறோம் தயவு செய்து எமக்கு ஆட்சியை தாருங்கள் மொட்டு-திஸ்ஸ குட்டி கதறல். அப்போ தேர்தல் திணைக்களத்தை இழுத்து மூடிவிட வேண்டியதுதான்.!

5.அதிகாரத்தில் இருக்கின்ற போது 7.5 கோடி ரூபா பணத்தை திரட்டியது எப்படி என்று விளக்கமளிக்க 22ம் திகதி வருமாறு விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் அழைப்பு!

6.சில வழக்குகளைத் திட்டமிட்டு சட்ட மா அதிபர் திலிப பீரிஸ் தாமதித்துக் கொண்டு வருவதாக பல தரப்புக்களில் இருந்து தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் வருகின்றன.!

7.கிரிந்த கடல் மண்ணை முறைகேடாக பாவித்து காசு சம்பாதித்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜித மீது அதிகுற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.!

8.சாய்ந்தமருதுவில் உயிர் தப்பிய சாரா ஜெஸ்மினை மன்னார்-கார்சல் அலாவுதீனே இந்தியாவுக்கு அனுப்பினார்.அதற்காக அவர் வீட்டில் படகும் ஸ்கூட்டரும் தயாராக இருந்தாம்.!

Previous Story

ඊශ්වරමූර්ති නම් ඉන්දියන් බුද්ධි ලොක්කා! ඔබ දැනගන්නම ඕනෑ ඉස්සරහට වැදගත් වන චරිතයක්....!

Next Story

නාමල්ව රිමාන්ඩ් කර,ජොන්ස්ටන්ට ඇප දූන්නේ ඇයි ? සම්පූර්ණ විස්තරය මෙන්න. තවත් අය අත්අඩංගුවට.