நஜீப்
நன்றி: 06.09.2026 ஞாயிறு தினக்குரல்
ரோஹன விஜேவீரவை காட்டிக் கொடுத்தது சோமவன்ச அமரசிங்ஹ. இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் வைத்திய நிபுணர் ஆர்னோல்ட் தயாசேன தகவல் இது. நானும் விஜேவீரவும் மாத்தறை-கோட்டேகொட கிராமத்தவர்கள்.

அத்துடன் ஜனாதிபதி பிரேமதாசதான் ரஞ்சன் விஜேரத்னாவையும் கொன்றதாக ஆர்னோல்ட் கூறுகின்றார். சமுதிதவுடனான இந்த உரையாடலை இதுவரை ஒன்பது மில்லின் பேர் பார்த்திருக்கிறார்கள்.
நாமும்; ஒரு முறை மத்திய குழுவில் அனைவரும் கொல்லப்பட்ட போது நீங்கள் மட்டும் தப்பியது எப்படி என்று சோமவன்சவிடம் கேட்க, இதுவரை எவரும் கேட்காத கேள்வி என்றவர் நானும் மனைவியும் சிலாபத்தில் உறவினர் ஒருவரின் மரணத்துக்குப் போய் இருந்தோம். அங்கு வைத்தே விஜேவீர கொலைச் செய்தியை அறிதோம்.

அப்போது நாம் கண்டியில் சைட் லேர்னஸ் (ஓடியன் தியேட்டருக்கு கீழ்) என்பவர் வீட்டில் வாடகைக்கு இருந்ததாக கூறி இருந்தார். இதனை நாம் எமது வார இதழில் அப்போதே சொல்லி இருந்தோம்.
சிரிசேன குரே மனைவியின் சகோதரர்தான் சோமவன்ச. மனிதன் தப்பிய பின்னணியும் அதுதான். (மேலதிக தகவலை வாய்க்கும் போது தருகின்றோம்)



