உலகின் பெரும் சோம்பேறி யார்!

-யூசுப் என் யூனுஸ்-

மாண்டெனெக்ரோ நாட்டில் நடைபெற்று வரும் உலகின் மிகப் பெரிய சோம்பேறி யார் என்ற போட்டி இப்போது 28 நாட்களைக் கடந்து தொடர்கின்றது. போட்டியில் இன்னும் 5 பேர் களத்தில் உள்ளனர். ஐரோப்பாவில் இருக்கும் குட்டி நாடு மாண்டெனெக்ரோ.

இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 லட்சம். இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான ஒரு போட்டி நடைபெறும் அதாவது, இந்த உலகிலேயே யார் மிகப் பெரிய சோம்பேறி என்ற பட்டத்திற்காக இந்த போட்டி நடக்கிறது. அதன்படி இந்தாண்டும் அங்கே இந்தப் போட்டி தொடங்கியுள்ளது.

Sleepy Montenegrins Win Village's 'Laziness' Olympics | Balkan Insight

கடந்த மாதம் தொடங்கிய இந்தப் போட்டி 28 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்போர் 24 மணிநேரமும் பெட்களில் படுத்தபடியே இருக்க வேண்டும். அவர்கள் எழுந்து அமரவே அல்லது நடக்கவோ கூடாது. ஒருவர் எத்தனை நாட்கள் அப்படியே படுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே போட்டியின் விதி.

Europe: Montenegro holds humorous tradition "laziest citizen" contest

அதிக நேரம் படுத்துக் கொண்டே இருந்தவர்தான் போட்டியில் வென்றவராக அறிவிக்கப்படுவார். இந்தப் போட்டியில் வெல்வோருக்கு 1,070 அமெரிக்க டலர். 350000 இலங்கை ரூபா  பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை 10 நிமிடங்கள் கழிப்பறைக்குச் செல்ல மட்டும் போட்டியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

நன்றி: 17.09.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மூன்று விரல்கள்... பெரிய தலை... மெக்சிகோவில் காட்சிப்படுத்தப்பட்டது ஏலியன்களின் உடல்களா?

Next Story

ஹக்கீமின் குட்டி ஆசை!