இனவாத நாடகத்துக்கு முடிவு!

நஜீப்

நன்றி: 18.10.2026 ஞாயிறு தினக்குரல் 

இதன் பின்னர் இந்த நாட்டில் இனவாத நாடகங்கள் எடுபடாது. இது எனது விருப்பமோ கருத்தோ அல்ல. சிங்கள் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ சமூகத்தவர்களின் விருப்பமும் இதுதான். இனவாதத்துக்கு சிங்கள மக்களும் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டார்கள்.

அவர்கள் இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள் இதனை இந்த இனவாத நாடகத்தை முன்னெடுப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த வியாழக்கிழமை நடாளுமன்றத்துக்கு வந்து உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திட்டவட்டமாக இந்தக் கருத்துக்களை அங்கு தெரிவித்து இனவாதிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

அத்துடன் திருகோணமலை சிறுவர்கள் படுகொலை லசந்த தாஜூதீன் எகனலிகொட படுகொலைகள் பற்றியும் துணிவுடன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன் இதில் படையினர் சம்பதப்பட்டிருந்தால் அவர்களுக்கும் தண்டனை பெற்றுத்தர முயற்சி செய்வோம்.

இது பற்றி படைத்தரப்பினருடனும் நான் கலந்துரையாடி இருப்பதாகவும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டிருந்தார்.

Previous Story

ධාරාණිපාත වැස්ස අකුරණ ජලාශයක් කරයි

Next Story

බුද්ධ ධර්මයට A එකක් තියෙන මුස්ලිම් කෙල්ල