இது தேர்தல் நடத்த நேரமல்ல!

நஜீப்

எந்தவொரு தேர்தலையும் நடத்தவதற்குப் இது பொறுத்தமான நேரமல்ல. ரணில் நாட்டை ஒரு வழிக்குக் கொண்டு வந்த பின்னர்தான் எந்தத் தேர்தலாக இருந்தாலும் நடக்கும். இப்படி குறிப்பிடுகின்றார். ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன.

ரணிலுக்கு எதிராக நாட்டைக் குழப்புகின்றவர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இவர் ஜனாதிபதி ரணிலுக்கு மிகவும் விசுவாசமானவர். எனவேதான் அவருக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை ரணில் வழங்கி இருக்கின்றார்.

இவர் பேசுவதை நாம் ரணில் பேசுவதாக எடுத்தக் கொண்டாலும் தவறாக மாட்டாது. எனவே இந்த நேரத்தில் ரஜபக்ஸாக்களும் தேர்தலை நடத்துவதற்கு விருப்பமில்லாது இருக்கின்றார்கள் ரணிலும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்.

ஆனால் பொதுத் தேர்தல் ஒன்று நடக்காதவரைக்கும் இந்த நாட்டில் பூதம் போல வளர்ந்திருக்கின்ற அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வராது. ஆனால் ரணிலும் மஹிந்தாவும் தேர்தலுக்குத் தயாரில்லை.

நன்றி:16.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஈராக் அதிபராக குர்தீஷ் இன அப்துல் லத்தீப் ரஷீத் தேர்வு

Next Story

செளதிமயமாக்கலின் தாக்கம்