செய்தி ஆப்: குண்டு வெடிப்பில் 9 குழந்தைகள் பலி January 12, 2022 ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்தனர்; நான்கு பேர் காயமடைந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள நாகர்ஹர் மாகாணத்தின் லாலோபர் மாவட்டத்தில், தானியங்களுடன் மாட்டு வண்டி நேற்று சென்றது. அந்த பாதையில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மாட்டு வண்டியின் சக்கரத்தில் பட்டு வெடித்துச் சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் ஒன்பது குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in August 1, 2026August 1, 2026 மீண்டும் வன்முறை கூட்டணி! August 1, 2026 என்ன பண்றேன் பார்-கோடா! August 1, 2026 புதிய போர் முறை… ஈரானின் டெக்னிக் என்ன? August 1, 2026August 1, 2026 அரசு புலிவாலை பிடித்ததா? August 1, 2026 நெருப்பு போர் சீனாவிலிருந்து ஈரானுக்குள் இறங்கும் நவீன ஆயுதங்கள் August 1, 2026August 1, 2026 සඟ සමුළුවේ රෙදි ගැලවෙයි ? Previous Story ஜனாதிபதி உரை தொடர்பில்:2 நாள் விவாதம்! Next Story இலங்கை போலீசுக்கு இந்தி பாடம்?