நஜீப்
நன்றி:02.08.2026 ஞாயிறு தினக்குரல்
சிறைச்சாலை வன்முறைகள் தொடர்பான நீதி அமைச்சர் ஹர்ஷனவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரனைக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தவர்கள் கூட ஆதரவாக வாக்களிக்க வரவில்லை.
நாமல் வேண்டுகேல். சஜித் அழைப்பு. ரணில் தலைமை என்று ஐமச. செயலகத்தில் நடந்த எதிரணிகளின் கூட்டத்தில் ஆர்வம் காட்டியவர்கள் அனைவரும் போல ஏதோ வகையில் குற்றச் செயல்கள் அல்லது மோசடிகள் காரணமாக வழக்குகளை எதிர் நோக்கி இருப்பவர்களாக இருக்கின்றார்கள்.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடந்த பௌத்தத்துக்கு ஆபத்து காப்பாற்ற வாருங்கள் என்று இனவாத தேரர்கள் நடாத்திய கூட்டத்துக்கும் தொடர்புகள் என்று ஐதேக. தலைவர் ரணிலே உறுதிபடக் கூறி இருந்தார்.
இந்த நாட்டில் 39995 தேரர்கள் இருக்கின்றார்கள்.நாட்டிலுள்ள விகாரைகள் 14732.ஆனால் சாசனத்தை காப்பாற்ற கூட்டத்துக்கு 260 தேரர்கள் மட்டுமே அங்கு வந்திருக்கின்றார்கள்.
வன்முறைக் கூட்டணி பசுத்தோல் போர்த்தி வருகின்றது. எச்சரிக்கை.!




