அலி சப்ரி அந்தர் பல்டி: நமக்கு ஏற்படும் அச்சம்!

-நஜீப்- 

பதவி விலகிய அலி சப்ரி மீண்டும் நிதி அமைச்சை ஏற்றுக் கொண்டு என்ன விமர்சனங்கள் வந்தாலும் நாட்டு நலனுக்காக பதிவியைத் தொடரப் போவதாகவும் கூறி இருக்கின்றார். அது அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்ட விடயம்.

ஹீரோக்களாகப் பார்க்கபட்ட ராஜபக்ஸாக்கள் இப்போது அதே மக்கள் மத்தியில் மிகக் கேவலமாக விமர்சிக்கப்பட்டு சீரோவாகி நிற்க்கின்றார்கள். இந்தப் பின்னணியில் ஜனாதிபதியின் கட்டாயத்தின் பேரில் மீண்டும் பதவியைத் தெராடர்வதாகவும் சப்ரி கூறுகின்றார்.

அதுவும் தேசப் பற்றுக் காரணமாகத்தான் அந்த முடிவாம் என்று நியாயமும் சொல்லப்படுகின்றது ஒகே. ஆனால் சமூக ரீதியில் நமக்கு இப்படியும் ஒரு அச்சம் இது விடயத்தில் வருகின்றது. அவர் மீண்டும் வரி விதிப்புக்களைச் செய்ய வேண்டி வரும் எரிபொருள்களின் விலைகள் மீண்டும் உயரும் என்றும் வெளிப்படையாகப் பேசியும் வருகின்றார்.

இந்த பொருளாதார சுமைக்கு மத்தியில் இன்னும் சுமைகள் விதிக்கப்டும் போது அலி சப்ரியும் விமர்சனங்களில் இருந்து தப்பமுடியாது. நிச்சம் அவர் மீதும்  கண்டனங்கள் வரும். அந்த விமர்சனங்கள் இனரீதியில் கூட அமைய நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இந்த நாட்டு மக்கள் இனபேதங்களை மறந்து ஐக்கியப்பட்டு அனைவரும் ஒரு கோஷத்தை எழுப்பிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அலி சப்ரி கட்டயப்படுத்தப்பட்டு நிதி அமைச்சை ஏற்றிருப்பது  இனங்களை மீண்டும் பிளவுபடுத்தி கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கையின் ஓர் அங்கமோ இது என்று அஞ்ச வேண்டி இருக்கின்றது.

எனவேதான் அமைச்சர் ஒதுங்கிய போது நாம் அதனை வரவேற்றோம் இப்போது இன ஐக்கியம் அமைச்சரால் சீர் குழைந்து போகுமோ எனப் பயப்படுகின்றோம்.

ஒரு சமயம் ஞானசார தேரர் அலி சப்ரி அதிகம் வாயடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் நீதி அமைச்சு வேலை பார்த்த போது எச்சரித்திருந்ததும்  சப்ரிக்கு நினைவு படுத்துகின்றோம்.

மக்கள் போராட்டத்தை முறியடிக்க அரசு பல உத்திகளை செய்து வருகின்றது என்று ஒரு கருத்து மக்கள் மத்தியில் இருப்பதால் நாம் இதனைப் பதிகின்றறோம்.

அமைச்சர் அலி சப்ரி கருத்துக்கள்:

அரசாங்க நிதியை சரிசெய்வதற்காக அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும், என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

எரிபொருள் மருந்துகள் உட்பட அத்தியாவசியபொருட்களை பெறுவதற்கும் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கும் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி அடுத்த ஆறு மாதங்களிற்கு தேவைப்படும்.

இந்தியாவிடமிருந்து எரிபொருளிற்காக மேலும் 500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரும்.  இது ஐந்து வார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக காணப்படும். ஆசிய அபிவிருத்தி வங்கி உலக வங்கி நட்புநாடுகளிடமும் அரசாங்கம் உதவியை நாடும்.

நாங்கள் எங்கிருக்கின்றோம் என்னநிலையில் இருக்கின்றோம் என்பது தெரியும். இந்த நிலைமைக்கு எதிராக போராடுவதை தவிர வேறு வழியில்லை.

அரசாங்க நிதியை சரிசெய்வதற்காக வரிகளை அதிகரிக்கவேண்டியிருக்கும், அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும், இந்த நடவடிக்கைகளிற்கு மக்கள் ஆதரவளிக்கப் போவதில்லை.

ஆனால் நாடு தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு இதனை செய்தே ஆகவேண்டும், நீங்கள் இதனை செய்ய வேண்டும் அல்லது நிரந்தரமாக தோல்வியை தழுவ வேண்டும் இது எங்கள் முன்னால் உள்ள தெரிவு என குறிப்பிட்டுள்ளார் சப்ரி .

Previous Story

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூழ்ச்சி அம்பலம்- பேராயர்

Next Story

இலங்கை :நெருக்கடி மறுபக்கம் ஆடம்பர ஆட்டம்!