அனுராதபுரத்தில் மீண்டும் புலி!

நஜீப்

விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 1985 மே 14ம் திகதி அனுராதபுரம் புனித நகருக்குள் புகுந்து கண்டபடி சுட்டதில்  பல நூறு அப்பாவிகள் மரணித்தனர். பல நூறுபேர் காயப்பட்டனர்.

ஈழப் போரில் இரு தரப்பினரும் மறக்க முடியாத ஒரு சம்பவம் இது. புலிகள் தரப்பில் வெற்றித் தாக்குதலாகவும் அரச தரப்பில் பெரும் பின்னடைவாகவும் இது அமைந்திருந்தது.

விடுதலைப் போராட்டம் ஓய்ந்தாலும் அதில் சம்பந்தப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று இலங்கையில் மட்டுமல்ல இந்தியா இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கமாக இருந்து வருகின்றது.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் தன்னை ஒரு விடுதலைப் புலி என்று பகிரங்கமாக அறிமுகம் செய்து கொண்டு அதே அனுராதபுர மொட்டுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூனா பேசியது  நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

குறிப்பிட்ட உறுப்பினரை மொட்டுக் கட்சி செல்லப்பிள்ளையாக பாவிப்பது ஏன்?

Previous Story

'அனுர அரசாங்கம் எதிரணியினரைப் பலிவாங்குகிறது'

Next Story

மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு..  15 பேர் பலி.. 56 பேர் காயம்!