கிழக்கில் அஸ்ரஃப் விற்பணை!

நஜீப்  

 நன்றி: 20.09.2026 ஞாயிறு தினக்குரல் 

கடந்த வாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஸ்ரஃப் பல இடங்களில் நினைவு கூரப்பட்டிருந்தார். நினைவு கூரப்பட்டார் என்று சொல்வதை விட தனித்துவ அரசியல் செய்கின்ற பல குழுக்கள் அங்கு அஸ்ரஃபை சந்தைப்படுத்தி இருந்தார்கள்.

அஸ்ரஃப் மரணத்துக்குப் பின்னர் முஸ்லிம் தனித்துவ அரசியல் பல குழுக்களாக பிளவுபட்டது. தந்தை இழந்த பின்னர் மன்னனின் பிள்ளைகள் குறுநிலங்களை ஆள்வது போல ஒருநிலை இது.

ஹக்கீம் தலைமையிலான மு.கா. காத்தான்குடியில் பேராளர் மாநாட்டையும் ஏறாவூரில் அஸ்ரஃப் நினைவு கூட்டத்தையும் நடாத்தியது. ஹக்கீமால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் ஹரிஸ் அதே நாளில் கல்முனையில் ஒரு நினைவு கூட்டத்தை நடாத்தி இருந்தார்.

இது தவிர ஆங்காங்கே இன்னும் பல நினைவுக் கூட்டங்கள் நடந்ததாகவும் தகவல். அஸ்ரஃபுக்கு பின்னர் சொல்லும்படி எந்தத் தரப்பும் சமூகத்துக்கு எதையும் பண்ணவில்லை.

ஆனால் அஸ்ரஃபை முன்னிறுத்தி அனைவரும் அரசியல் வியாபாரம் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

 

Previous Story

USA கிரீன் கார்டு அப்ளை!

Default thumbnail
Next Story

ශ්‍රී ලංකාවේ පැරණිම Classic Collection එකක් - Classic Car - Old is Gold