NPP யில் டசன் கணக்கான முஸ்லிம் வேட்பாளர்கள்

வருகின்ற 2024 பொதுத் தேர்தலில் டசன் கணக்கான முஸ்லிம் வேட்பாளர்களை NPP. களத்தில் இறக்குகின்றது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான முஸ்லிம்கள் இந்த முறை என்பிபி. வேட்பாளர் அனுர குமாரவுக்கு வாக்களித்திருந்தனர்.

நயவஞ்சக முஸ்லிம் அரசியல்வாதிகளும் இன்னும் சில விசமிகளும் போலியான பிரச்சாரங்களைச் செய்து முஸ்லிம் சமூகத்தை வழிகெடுத்து அனுரவுக்கு ஆதரவாக வாக்களிப்பதைத் தடுக்க முயன்றனர்.

Sri Lankan Muslims fearful after Buddhist mob violence | CNN

அதற்காக பல்வேறு கட்டுக் கதைகளைப் பரப்பியும் வந்தனர். அவை எதனையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாத முஸ்லிம்கள் அனுரவின் வெற்றிக்கு தமது பங்களிப்பை என்றும் இல்லாத வகையில் வழங்கி இருந்தது அனைவரும் அறிந்த செய்தியே .

இந்த முறை முஸ்லிம் சமூகத்தின் சார்பில் டசன் கணக்கானவர்கள்  NPP.யில் களமிறங்குவதால் அவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Bodu Bala Sena and violence in Aluthgama and Beruwala | Daily FT

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலை விட இந்த முறை NPP.க்கு வாக்களிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அணியில் களமிறங்கும் முஸ்லிம்களைக் கௌரவமாக வெற்றிபெறச் செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பும் முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கின்றது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

Sri Lanka's Election Commission announces postal voting dates and locations - Sri Lanka

அதன்படி மாவட்ட ரீதியில் பின்வரும் எண்ணிக்கையானவர்கள் வேட்பாளர்களாக களத்துக்கு வருகின்றார்கள்.

கொழும்பு                 -2
கம்பஹ                    -1
களுத்துறை            -2
கண்டி                        -2
மாத்தளை                -1
நுவரெலிய               –
காலி                            -1
மாத்தறை                 -1
ஹம்பந்தோட்டை-1
அனுராதபுர               -1
பொலன்னருவ       -1
யாழ்ப்பாணம்           –
வன்னி                         -2
குருணாகல              -2
புத்தளம்                      -2
திகாமடுல்ல            -3
திருகோணமலை  -3
மட்டக்களப்பு            -2
பதுள்ளை                    -1
மொனராகல              –
இரத்தினபுரி               -1
கேகல்லை                 -1
தேசிய பட்டியல்      -2

Previous Story

இஸ்ரேல் ஹமாஸ்: 'காயம், வலி, ஆதரவற்ற நிலை'- OCT. 7க்கு பிறகு தலைகீழாக மாறிய வாழ்க்கை

Next Story

ஆளும் கட்சி: போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள்  சிலர் அதிருப்தியில்!