நமது வரவு செலவில் ட்ரம்பின் செல்வாக்கு!

நன்றி 08.11.2026  ஞாயிறு தினக்குரல்

நஜீப் பின் கபூர்

2027 Budget to be held from 12 Nov. to 14 Dec. – The Island

ஜனாதிபதி அனுரகுமார காட்டப்போகும் 2027 மெஜிக்!

நமது  சமயலறைகளையே சீரழித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

ட்ரம்புக்கு  போரிலும் தோல்வி தேர்தலிலும் தோல்வி!

Iran Embassy's Cartoon Shows Trump Digging Grave, Netanyahu Pushing US-Flag Coffin The Iranian Embassy in Sarajevo shared a cartoon on X captioned, "America's good friend!!!". The illustration appear

வரவு வளமாக இருந்தால்தான் வாழ்வு செழிக்க முடியும். எனவே 2027 ஆண்டுக்கான நமது வரவு செலவுத்திட்டத்தை வருகின்ற 12ம் திகதி ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்க சமர்ப்பிக்க இருக்கின்றார். அதே போல அமைதி நிலவினால்தான் நாட்டிலும் வையகத்திலும் குடும்பத்திலும் கூட நிம்மதி இருக்கும்.

அமெரிக்க இஸ்ரேல்-ஈரானுடன் மேற்கொண்டு வருகின்ற சண்டை ஒட்டுமொத்த உலகத்தையும் நெருக்கடிக்குத் தள்ளி இருக்கின்றது.

அதனால் உலகில் இருக்கின்ற ஒவ்வொரு தனிமனிதனுடைய தனிப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திலும் இந்த சண்டை பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. எனவேதான் பொருட்களின் விலை ஏற்றம் நம்மை மட்டுமல்ல அமெரிக்காவையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. அதனால் சமர் மக்களுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகின்றது. இது மனித குலத்திற்கு  வேதனைகளைக் கொடுக்குக் கொண்டிருக்கின்றது.

ஒரு தனி மனிதனின் செயல்பாடுகள் உலகத்தில் எந்தளவுக்கு தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நல்ல உதாரணம். நமது வரவு செலவுத்திட்டதிலும் சமயலறைகளிலும் ட்ரம்ப் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றார் என்பது பற்றி பேசு முன்னர் முதலில் 2027 க்கான வரவு செலவுத்திட்டம் பற்றி பார்ப்போம்.

What Is Petroleum? Importance and How to Invest in It | The Motley Fool

நாம் நிறையவே வரவு செலவுத்திட்டங்கள் பற்றி பார்த்திருக்கின்றோம் விமர்சனம் கூட பண்ணி இருக்கின்றோம். என்பிபி. தனது மூன்றாவது வரவு செலவுத்திட்டத்தை இன்னும் சில நாட்களில் சமர்ப்பிக்க இருக்கின்றது. நம்மைப் பொறுத்தவரை இது தீர்க்கமான ஒரு வரவு செலவுத்திட்டம். அதிலும் சர்வதேச அரசியல் தாக்கம் செலுத்தி வருகின்றது.

குறிப்பாக ட்ரம்பின் ஈரானுக்கு எதிராக போர் நமது பொருளாதாரத்தில் கனிசமான பாதிப்புக்களை ஏற்படுத்தி  இருந்தாலும்; இது துண்டுவிழும் தொகை குறைந்த வரவு செலவுத்திட்டமாக அமைகின்றது.

துண்டு விழும் தொகையை கணிசமாக குறைப்பதற்கு அடிப்படை காரணம் இந்த என்பிபி. அரசின் கொள்கைகள் தியாகங்கள் விட்டுக் கொடுப்புக்கள் என்பதில் மாற்று கருத்துக்கள் இருக்க முடியாது. கடந்த அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்கள் ஊதாரித்தனம் ஊழல்களுடன் ஒப்பு நோக்கின்ற போது அனுர அரசில் அப்படியான மோசடிகளுக்கோ வஞ்சகங்களுக்கோ வாய்ப்பே கிடையாது என்ற நிலை.

பொதுவாக இதனை பொதுமக்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அரசியல்வாதிகள் பெற்று வந்த அசாதாரண சலுகைகள் பல அடியோடு  இரத்துச் செய்யப்பட்டு அதன் நன்மைகள் குடிகளுக்குச் சென்றடையும் விதமாக திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

ஈரான் போர் நெருக்கடிகள் தித்வா போன்ற பாதிப்புக்களிலிருந்து நாட்டை மீட்டுக் கொண்டுதான் அரசு இந்த பயணத்தை முன்னெடுத்து வருவதும் அனைவரும் அறிந்ததே.

10 Top Oil-producing Countries | INN

ரணில் அரசாங்கத்தில் நிதி அமைச்சாரக இருந்த பந்துல குணவர்தன தன்னால் ஒரு ஐந்து சதம் கூட சம்பள அதிகரிப்பு செய்ய முடியாது அதனை தொழிலாளர்கள் எதிர்பார்க்கவும் கூடாது என்று கூறி இருந்தது அனைவரும் அறிந்த வார்த்தைதான்.

அதனைத் தொடர்ந்து அதிகாரத்துக்கு வந்த என்பிபி. அரசாங்கம் எவரும் நம்ப முடியாத அளவில் தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பை செய்து கொண்டு வருகின்றது.

மேலும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளையும் அதே பாணியில் சரி செய்கின்ற ஏற்பாடுகளை இந்த அரசு செய்து வந்திருப்பதும்  மனட்சாட்சியுள்ள மனிதர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதே நேரம் ரணில் அல்லது ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்த வரப்பிரசாதங்கள் கிடைத்திருக்குமா என்று சிந்திக்க வேண்டும்.

அனுரகுமார திசாநாயக்க இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்க்கின்ற போது வங்குரோத்து நாடு என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது. இந்திய தமிழ் நாட்டில் ஒரு பிச்சைக்காரர் தான் சேர்க்கின்ற பிச்சைக் காசை நமது பட்டினியை போக்கு இங்கு அனுப்பி வைத்திருந்தார்.

அப்படியான ஒரு நாட்டை பதவிக்கு வந்த ஓரிரு வருடங்களுக்குள்ளே வங்குரோத்து என்று அவப்பெயரை இந்த அரசு நீக்கி இருந்ததும் தெரிந்ததே. இப்பபோது நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி  ஓரளவுக்கு தனது பணிகளை முன்னெடுத்து வரும்  ஒரு நிலை காணப்படுகின்றது.

நாடுபூராவிலும் பரவலாக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அரசு சொந்த பணத்திலே பல அதிவேக நெடுஞ்சாலைகளை இன்று புதிதாக ஆரம்பித்து தற்போது அந்தப் பணிகளும் நடந்து வருவதும் தெரிந்ததே. தித்வா நெருக்கடி ஏற்பட்ட போது அரசு அதற்கு 50000 ஆயிரம் கோடிகளை செலவு செய்ததும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

நமது வரவு செலவு திட்டத்தில் மட்டுமல்ல இன்று உலகிலுள்ள அனைத்து நாடுகளினது வரவு செலவு திட்டத்திலும் இந்த ட்ரம்பின் நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகினறன. அதனால் ட்ரம்பின் நண்பர்கள் கூட அவருடன் இது விடயத்தில் நல்லுறவில் இல்லை. ஐரோப்பிய சமூகம் கூட முரண்பாடுகளுடன் தான் இருக்கின்றன. ஈரானுடனான போரில் அவர் தனித்தே நின்றதை நாம் பார்த்தோம். அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஈரானுடன் தேவையில்லாத ஒரு போரை ட்ரம்ப் துவங்கினார்.

அதனால் அமெரிக்காவில் பெரும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டது.  சொந்த நாட்டு விவகாரங்களைவிட  இஸ்ரேல் நலன்களில் ட்ரமப்; ஆர்வமாக இருந்து வந்திருக்கின்றார் ட்ரம்ப் என்றும் வான்ஸ் சாடுகின்றார். இதற்கு அவருடைய மருமகனின் அழுத்தங்கள் காரணமாக இருந்து வந்திருக்கின்றன.

ட்ரமப் மருமகன் ஒரு யூதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் தமக்கு பின்னடைவு என்பதை உப ஜனாதிபதி ஜே.டி.வான்; முன்கூட்டியே ட்ரம்பிடம் சொல்லி இருந்ததையும் இப்போது பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்.

Martin Rowson on the aftermath of the US midterm elections – cartoon | Martin Rowson | The Guardian

2027 ஜனவாரி முதலாம் திகதி முதல் 2027ம் ஆண்டு திசம்பர் 31ம்திகதி முடிவடைகின்ற வரையிலான காலப்பதிக்கு சேவைகளுக்காக 499277 பில்லின் அல்லது 4.99 ரில்லியன்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அபிவிருத்தி பணிகளுக்கு 857 பில்லியன்கள். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு 657 பில்லியன்கள். சுகாதாரத்துறைக்கு 590 பில்லியன்கள். போக்குவரத்துக்கு 500 பில்லியன். பாதுகாப்புக்கு 458 பில்லியன். கல்விக்கு 328 பில்லியன் என்று பிரதான செலவீனங்கள் அமைக்கின்றன.

அத்துடன் பற்றாக்குறைகளும் தேவையான குறைமதிப்பிட்டு யோசனைகளையும் ஜனாதிபதி தனது வரவு செலவு உரையில் முன்வைப்பார். நமது நாட்டில் சமகாலத்தில் அடிக்கடி பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதற்கும் பெற்றோலியப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கும் மூலகாரணம் ட்ரம்ப் ஈரான் மீது கொடுக்கின்ற நெருக்கடிகள்தான். இது நமக்கு மட்டுமல்ல முழு உலகத்துக்கும் ஒரு சவாலாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. இது 2027 வரவு செலவுத்திட்டம் தெடர்பாக நமது சிறு தகவல்கள்.

இப்போது முழு உலகமும் பேசிக்கொண்டிருக்கின்ற அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தேர்தல்கள் பற்றியும் அதன் தாக்கங்கள் பற்றியும் சற்றுப்பார்ப்போம். பலர் இது பற்றி பேசி இருந்தாலும் நாம் சில புதிய தகவல்களை இது விடயத்தில் வாசகர்களுடன் பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

அமெரிக்க சனத்தொகை 34 கோடி. அதில் 65 சதவீதமானவர்கள் கிருஸ்தவ சமூகத்தினர். இவர்களில் நான்கு பிரிவினர்கள் இருக்கின்றார்கள். புரட்டஸ்தாந்து 32  கத்தோலிக்கர்கள் 20 ஏனைய பிரிவுகள் 12சதவீதம் என்று அது அமைகின்றது. அத்துடன் யூதர்கள் அங்கு மிகவும் செல்வாக்குடன் இருக்கின்றார்கள். அவர்கள் 2.4 சதவீதம். (75 இலட்சம் பேர்.)  முஸ்லிம்கள் 1.6 சதவீதமானவர்கள். (65 இலட்சம் வரை) அதன்படி 100 செனட் உறுப்பினர்களில் மூன்று யூத சமூகத்தினருக்கும் முஸ்லிம்களுக்கு ஒன்று அல்லது இரண்டு இருக்கலாம். ஆனால் செனட் உறுப்பினர்களில் பத்துப் பேர்வரை யூத சமூகத்தினர். மேலும் பத்துப் பேர் வரையில் இருக்க வேண்டிய பிரதிநிதிகள் சபையில் யூதர்கள் எண்ணிக்கை 30 வரையில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

இப்போதுதான் அப்துல் எல் சையத் என்ற முஸ்லிம் உறுப்பினர் முதல் முறையாக மிச்சிக்கன் செனட் உறுப்பினராக தெரிவாகி இருக்கின்றார். இவர் எகிப்திய வம்சாவழி. மனைவி இந்திய-கன்னடா பூர்வீகம். இருவரும் செல்வாக்கான வைத்தியர்கள். சனத்தொகை விகிதாசாரத்துக்கு அமைய இங்கு பிரதிநிதிகள் சபையில் ஒரு ஆறு முஸ்லிம்கள் இருந்தால் போதும் என்ற நிலையில் ஒன்பது  முஸ்லிம்கள் இந்த முறை தேர்தலில் தெரிவாகி இருக்கின்றார்கள்.

இதே போன்று இந்திய வம்சவழியைச் சேர்ந்த ஆறு அல்லது ஏழு பேர் பிரதிநிதிகள் சபைக்குத் தெரிவாகி இருக்கின்றார்கள். முதல் முறையாக கறுப்பு இனத்தவர் ஒருவர் செனட் சபைக்கும் தெரிவாகி இருக்கின்றார். முதல் முறையாக பேராசிரியர் ஹக்கீம் ஜெப்ரிஸ் என்ற கறுப்பினத்தவர் சபாநாயகராகத் தெரிவாக இருக்கின்றார். இவர் ஒரு பப்டீஸ் கிருஸ்தவர்.

தேர்தல் முடிவுகள் ஜனாதிபதி ட்ரம்புக்குப் பெரும் பின்னடைவைக் கொடுத்திருக்கின்றது. தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவும் ஜனநாயகக் கட்சியுடன் பயணிக்க தான் தயார் என்று ஊடகங்களில் அவர் பேசி வருகின்றார். ஆனால் அவரது வார்த்தைகளை யாரும் எடுத்த எடுப்பில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் மனிதனது செயல்பாடுகள் தொடர்பில் யாருக்கும் நல்லெண்ணம் கிடையாது என்பதுதான்.

தேர்தல் முடிந்த கையோடு ட்ரம்ப் தான் வழக்கமாக இஸ்ரேலுக்குக் கொடுத்து வருகின்ற நான்கு ரில்லியன் டொலர்களை இந்த வருடத்துக்குப் பின்னர் வழங்க முடியாது என்று அறிவித்துவிட்டார். இது நமது பஜெட்டுக்கு சமமான ஒரு பெரிய தொகை. நமக்குத் தெரிந்தவகையில் பதவிக்கு நெதென்யா அல்லாத ஒருவர் அமர்ந்து விடக்கூடாது என்றுதான் அவர் இந்த அறிவிப்பை செய்திருக்கின்றார். 2028 வரை இந்த நான்கு பில்லியன் டொலாகளை அமெரிக்கா  இஸ்ரேலுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் முன்னைய தீர்மானமாக இருந்தது.

இப்போது இஸ்ரேல் தேர்தல் பற்றியும் சற்று பார்ப்போம். இது அனைவரும் அறிந்த செய்தியாக இருந்தாலும் அங்கு ஒரு கோடி வரை குடிமக்கள். இதில் யூதர்கள் 72 சதவீதம் அரேபியர் 21 சதவீதம் ஏனையோர் 7 சதவீதம்.

இங்குள்ள அரேபியர்களில் சிறு அளவில் கிருஸ்தவர்களும் அடங்குகின்றார்கள். நாடாளுமன்றில் 120 ஆசனங்கள். தேர்தலில் நெதென்யா அணிக்கு 53. எதிர் அணிக்கு 48 ஆசனங்கள். அரேபிய கூட்டணிக்கு 19 ஆசனங்கள். யாருக்குமே தனிப் பெரும்பான்மை கிடையாது. அரேபியர்களை தமது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள இரு தரப்பினருக்கும் விருப்பு கிடையாது.

ஆனால் எதிரணியினர் நெதென்யா அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். எனவே அரேபியருடன் கூட்டணி வைத்துக் கொள்ளாமலே ஒரு அரசை நிருவத்தான் அவர்கள் விரும்புகின்றனர். ஆபத்தான நேரங்களில் அரசு கவிழ்ந்து விடாமல் அரபுக்கூட்டணி பார்த்துக் கொண்டால் போதும் என்று ஒரு உடன்பாட்டுடன் ஐசென் கோட் அங்கு அரசை அமைக்கக்கூடும் என்ற நிலை. அதற்கு அரபுக் கட்சிகளும் ஓகேயாம்.!

தமக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த நெதென்யாவும் ட்ரம்பும் தேர்தல் களத்தில் அடிபட்டு கிடப்பது ஈரானுக்கு சந்தோஷமான செய்திகளாக இருக்கலாம். உலகத்தையே வழி நடாத்திக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டுக்கு  முதிர்ச்சியில்லாத ஒரு மனிதன் ஜனாதிபதியாக பதிவியேற்றதன் விளைவுதான் இந்த சீரழிவுகளுக்கு அடிப்படை காரணம். அ

மெரிக்கர்களுக்கு இப்போதுதான் ஞானம் பிறந்திருக்கின்றது போலும். தமக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். எப்படியும் சமகாலத்தில் நாடுகள் மட்டுமன்றி ஒவ்வொரு தனி மனிதனும் ட்ரம்பால் பாதிக்கப்பட்டிருக்கின்றான் நோகடிக்கப்பட்டிருக்கின்றான்.

Iran Embassy's Cartoon Shows Trump Digging Grave, Netanyahu Pushing US-Flag Coffin The Iranian Embassy in Sarajevo shared a cartoon on X captioned, "America's good friend!!!". The illustration appear

அந்த வகையில் அவருக்குக் கிடைத்த தோல்வி உலகத்தாருக்கு சற்று நிம்மதியைக் கொடுக்கலாம். ஆனால் பதவியில் இருக்கின்ற இன்னும் இரண்டு வருடங்களுக்கு மனிதன் பெட்டி பாம்பாக இருந்து விட்டுப் போவாரா. அல்லது கடைசி நேரத்தில் என்ன வம்பை இழுத்து விடுவாரோ என்ற ஒரு அச்சம் அனைவருக்கும் இருக்கத்தான் செய்கின்றது.

Previous Story

இனி ட்ரம்ப் அவுட்? ஈரான் புகுந்து விளையாடுகின்....

Next Story

அமெரிக்க செனட் சபையில் இஸ்லா