குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜீப்

நன்றி 08.11.2026  ஞாயிறு தினக்குரல் 

1.அரச ஊழியர்களுக்கு 20000 முதல் 80000ரூபா வரையில் சம்பள உயர்வு என்று அண்மையில் வெளியான ஊடக செய்தி ஒரு அரச விரோத பிரச்சாரம் என்று தெரிய வருகின்றது.

2.அமெரிக்க இஸ்ரேல் தேர்தல்களில் ஈரானுக்கு தொடர் வெற்றிகள். அமெரிக்க மக்களும் எங்களுடன்தான் இருக்கின்றார்கள். ஈரான் சபாநாயகர் பெருமிதமும் நன்றி கூரலும்.!

3.ட்ரம்பின் மகள் இவங்காவின் கணவன் ஜனாதிபதி ட்ரம்பை தவறாக வழிநடாத்தியதால் தான் நமக்கு இந்தத் தோல்வி வந்தது.- உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் குற்றச்சாட்டு.!

4.அரசு முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை அவதானிக்கின்ற போது இந்த அரசாங்கத்துக்கு முறையாக ஐஎம்எப் கடன்களை செலுத்திக் கொள்ளமுடியும். -ஐமச. அர்ஷ நற்சான்று.!

5.ட்ரம்புக்கு இருந்து வந்த அதிகாரங்கள் ஜனவாரி மூன்றாம் திகதி வரை அப்படியே இருக்கும். வெற்றி பெற்றவர்கள் ஜனவாரி மூன்றாம் திகதி பதவி ஏற்ற பின்னர் தான் லடாய் துவங்கும்.!

6.கடைசி துரும்புச் சீட்டை நீதிமன்றல் வீசி அடித்திருக்கின்றது உளவுத்துறை. ஈஸ்டர் தாக்குதலுக்கு சலே தலைமை. அவருக்கு மூன்று பொலிஸ் உயர் அதிகாரிகள் துணையாம்.!

7.தன்னைத் தேற்கடிக்க சதி நடக்குது கண்டுபிடித்து முன்பே அறிவிப்பவருக்கு ஒரு மில்லியன் டெலர்கள். தேர்தலில் வெற்றிபெற்றால் தலைக்கு 5000 டொலர் தருவேன்.-ட்ரம்ப்!

Previous Story

அமெரிக்க தோல்வி - கடும் விரக்தியில் டிரம்ப்? Trump ஐ காலிபண்ணிய ஈரானின் பதிலடி

Next Story

වෘත්තීය සමිති ජාතික