நஜீப்
நன்றி 01.11.2026 ஞாயிறு தினக்குரல்
முழு உலகத்தினதும் பார்வை இஸ்ரேல் மீது இருக்கின்ற போது நாம் மட்டும் அதிலிருந்து விடுபடுவது நியாயமில்லை.

எனவே அந்தத் தேர்தல் பற்றியும் பார்ப்போம்.இஸ்ரேல் நாடாளுமன்றம் நெசெட் என்று அழைக்கப்படுகின்றது. உறுப்பினர்களின் எண்ணிக்கை 120. தனிப் பெரும்பான்மை 61 என்று அமையும்.
1948ல் இஸ்ரேல் உதயமானது முதல் நடந்து வருகின்ற எந்த ஒரு தேர்தலிலும் ஆட்சியாளர்கள் தனிப் பெரும்பான்மை பெற்று அரசாங்கங்களை அமைக்க முடியவில்லை என்று தெரிகின்றது.
சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் நெத்தென்யாவின் பிரதான போட்டியாளர் ஐசென் கோட் இருவருக்குமிடையில் நெருக்கமான போட்டி.
ட்ரம்ப் நேரடியாக நெத்தென்யாவை ஆதரித்தார். எதிரணி வேட்பாளர் ஐசென் கோட் நெத்தென்யா பெரும் ஊழல்பேர்வழி அவரிடமிருந்து இஸ்ரேலை விடுவிக்க வேண்டும் என்று பேசுகின்றார்.
தேர்தல் முடிவுகள் நெத்தென்யா 52 ஐசென் கோட் 49 அரபுக் கூட்டணி 19 என்ற நிலை. மீண்டும் தேர்தலா அரபுக்களுடன் கூட்டணியா பொறுத்திருந்து பார்ப்போம்.



