குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜீப்

நன்றி 01.11.2026  ஞாயிறு தினக்குரல்

1.பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் முதலாம் சுற்றில் பின்னடைவைச் சந்தித்த இடதுசாரி வேட்பாளர் லூலா த சில்வா இரண்டாம் சுற்றில் 51.79சதவீத வாக்குகளுடன் அதிரடி வெற்றி.!

2.அரசியல் பலிவாங்கல் காரணமாகவே தனக்குத் தொந்தரவு தருகின்றார்கள் என்று ஒப்பாரி வைத்த ஜொன்ஸ்டன் தப்புச் செய்ததை பகிரங்கமாக நீதிமன்றில் ஒத்துக் கொண்டிருக்கிறார்.!

3.உலகில் உள்ள ஒரே ஒரு யூத சியோனிச அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற அரசியல் அதிகாரம் இன்று அங்கு வாழ்கின்ற அரேபியக் கட்சிகளின் கைகளில் போய் சிக்கி இருக்கின்றது.!

The Wit and Wisdom of Mulla Nasruddin – Shakti's Musings: Blogs on everything under the sun

4.இந்த அரசாங்கம் ஒருவாரம் கூட ஓடாது. மூன்று மாதங்கள் ஆறுமாதங்கள் என்றார்கள்.சஜித் அணி மரிக்கார் இப்போது அரச ஆயள் இன்னும் ஒரு வருடம்தான் என காலக்கெடு.!

5.ஜொனி பாவித்த சொகுசு வாகனம் லண்டனில் களவாடப்பட்டு ரூமேனிய வழியாக நாட்டுக்கு கடத்தப்பட்டு போலி இலக்கம் பதிவு செய்யப்பட்ட ஒன்று என்று இப்போது உறுதி.!

6.திசை காட்டி அரசாங்கத்திலும் சந்தேக நபர்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் அடித்துக் கொலை செய்யப்படுவது அதிர்ச்சியான தகவல். எந்த நியாயம் என்றாலும் ஏற்க முடியாத ஒன்று.!

7.எதிரணி அரசியல் மேடைகளில் தேரர்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்ற சில கோடாரிக்காம்புகளை முஸ்லிம் சமூகம் ஜோக்கர்களாகத்தான் பார்க்கின்றார்கள்.!

Previous Story

நெதன்யாகுவை காலி செய்த இஸ்ரேலிய இளைஞர்கள்!