நஜீப்
நன்றி: 18.10.2026 ஞாயிறு தினக்குரல்
1.ராஜாக்கள் தற்போது குடிகளின் அனுதாபம் பெறும் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சீரியஸ், வைத்தியசாலையில். மகனார் மண்டேலா பாத்திரத்தில்!
2.சஜித் அணி சிறுபான்மைக்கு எதிரான கதைகள் பற்றி ஊடகங்கள் கேள்வி எழுப்ப அது பற்றி நாம் பதில் தரமாட்டோம் என்று தலைவர்கள் வம்பு. அல்லது ஓடுகின்றார்கள்.!
3.ஞானசாரவுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது நடந்து வரும் போராட்டங்களின் பின்னணியில் மொட்டுக் கட்சி இருப்பதாக குற்றச்சாட்டு. சிறு முதலாளிகள் ஊடாக காசும் செலவாம்.
4.ஞானசார விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர் ஒருவர் போதையில் தெருவில் வீழ்ந்து கிடக்கின்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.!
5.காவி ஆடையைக் களைந்து தேரர்களை நீதிமன்றம் கூட்டி வரக்கூடாது என்ற போராட்டம் இப்போது ஞானசாரவுக்கு நிபந்தனை அற்ற விடுதலை என திசைமாறி இருக்கின்றது.!
6.சிறுமி ரிசானாவை அப்போதய அரசால் காப்பற்ற முடியவில்லை. ஆனால் தற்போதய அனுர அரசு சவுதியில் மரண தண்டனையில் இருந்து அணோஜனை விடுவித்துக் கொண்டது!.
7.அனுர அரசு தனது 2027ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை வரும் நவம்பரில் சமர்ப்பிக்கவுள்ளது. இதில் குடிமக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் பல சலுகையாம்.!




