நஜீப்
நன்றி: 18.10.2026 ஞாயிறு தினக்குரல்
அனுர அதிகாரத்தைக் கைப்பற்றப் போகின்றார் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த பசில் ராஜபக்ஸ தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார்.
இந்த நிலையில் அவருக்கு எதிரான சிவப்புப் பிடியாணை ஒன்று நீதி மன்றத்தில் பெறும் முயற்சி நடக்கின்றது. பசிலுக்கு எதிராக நீதி மன்றங்களில் நிறையவே வழக்குகளும் குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன.
இதனால் மனிதன் கள்வர்கள் கூட்டம் தப்புவதற்காக காடு விட்டு காடு பாய்வது போல அமெரிக்காவிலிருந்து தலைமறைவாகும் முயற்சிகளில் இறங்கி இருப்பதாகத் தெரிகின்றது.
அனேகமான பசில் ராஜபக்ஸ தென் அமெரிக்காவுக்குள் தப்பி ஓடலாம் என்று தெரிகின்றது. தென் அமெரிக்காவில் இடதுசாரிகளின் செல்வாக்கு அதிகம் இருப்பதால் அனுர அரசு அங்கும் ஆதிக்கம் செலுத்தலாம் என்ற அச்சமும் இருக்கின்றது.
நமக்கு வருகின்ற தகவல்களின் படி மெக்சிகோவுக்கு பசில் ஓடிப்போகலாம் என்றும் சொல்லப்படுகின்றது.





