நாடுபூராவிலும் பட்டாசு வெடி!

நஜீப்  

நன்றி: 06.09.2026 ஞாயிறு தினக்குரல்

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

சிங்கள தமிழ் புத்தாண்டு நாட்களில் சுப வேளைகளில் ஒரே நேரத்தில் வெடி ஓசை கேட்பது நமக்குத் தெரியும். அது போல ஒரு மத்தாப்பு சத்தத்துடன் உளவில் தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்த எதிரணியினர் கலந்துரையாடியுள்ளதாக நமக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது.

நீதிபதிகளின் வயதை இரண்டு வருடங்களால் நீடிப்பது தொடர்பான தீர்ப்பு சபாநாயகரிடம் கையளிக்கப்பட இருக்கின்றது. அல்லது நமது குறிப்பு அச்சேறுகின்ற நேரத்தில் அது சபாநாயகர் கைகளுக்குப்போய் இருக்கலாம்.

அதில் தமது தரப்புக்கு வெற்றி கிடைக்குமாக இருந்தால் ஒரு தேர்தல் வெற்றிபோல அதனைக் கொண்டாட எதிரணி அரசியல்வாதிகள் தீர்மானித்திருப்பதாக அந்தத் தரப்பில் நமக்குத் தகவல்கள் தரும் முகவர்  முன்கூட்டியே நமக்குச் செய்தி சொல்லி இருக்கின்றார்.

சபாநாயகர் தீர்ப்பு சர்வசன வாக்கெடுப்பு என்றிருந்தாலும் தான் பின்வாங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவும் உறுதியாக இருக்கின்றார்.

Previous Story

2 பேர் தங்களை தாங்களே தபாலில் அனுப்பிய சுவாரஸ்யம்

Next Story

නාමල්ට හෙනහුරෙක්වූ නිමල් පෙරේරා නිහඬ කරවීමේ උත්සහයක් | නාමල්ට ඇපත් නැතිවෙන නඩුවක්