நஜீப்
நன்றி: 06.09.2026 ஞாயிறு தினக்குரல்
நாம் என்னதான் ஆங்காங்கே சந்திப்புக்களை – கூட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தாலும் ஆளும் தரப்பு மிகவும் வலுவாக இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.
வெள்ளம் கரைபுரண்டு வரும் நேரங்களில் கீரியும் பாம்பும் ஒரே மரக் கட்டையில் ஒற்றுமையாக பயணிப்பது போல ஓரணியில் இணைந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றார் சாமர சம்பத்.
இன்று எதிரணியில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிகவும் கவர்ச்சிகரமான பேச்சாளர் சாமரதான் என்பது நமது கணிப்பு. அவரது கல்வி அறிவு கருத்துக்கள் தொடர்பில் கேள்விகள் இருந்தாலும் மனிதனுடைய வார்த்தைகள் அதிரடியாக இருந்து வருகின்றது.
ஆளும் தரப்புக்கு 159. இன்னும் சிலர் அவர்களுடன் இணையவும் இடமிருக்கின்றது. எனவே அது 175 வரை உயரலாம் எனவும் அவர் யதார்த்தமாக பேசி வருகின்றார்.
எனவேதான் கிரீயையும் பாம்பையும் கூட்டணிக்கு வருமாறு சாமர பகிரங்க அழைப்பு விடுக்கின்றார்.





