“கண்டிப்பாக டிரஸ் போடக்கூடாது..”

 நிர்வாண டின்னர்..போட்டி போடும் இளசுகள்!

பொதுவாக நிர்வாணம் என்றாலே அதை ஆபாசத்துடன் தொடர்புபடுத்தி தான் அனைவரும் பார்ப்பார்கள். ஆனால், ஆடை இல்லாமல் இருப்பது எல்லா சூழல்களிலும் ஆபாசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி, அமெரிக்காவில் வினோதமான ஒரு உணவகத்தை தொடங்கியுள்ளனர்.இங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆடைகள் இல்லாமல் தான் உணவு சாப்பிட வேண்டுமாம்.

நிர்வாண டைனிங் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பிரபல உணவகம் ஒன்றில் நிர்வாண டைனிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். மாதம் ஒரு முறை இந்த உணவகத்தில் இந்த நிர்வாண டைனிங் நிகழ்வு நடத்தப்படுமாம். ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 15 முதல் 20 பேர் வரை கலந்து கொள்கின்றனர்.

உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆரம்பத்திலேயே முழுமையாக ஆடைகளை களைந்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முதலில் விருந்தினர்கள் தங்களது ஆடைகளை மாற்றிக்கொண்டு, விருப்பத்துக்கு ஏற்ப ரோப் அணிந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் சிலர் இதுபோன்ற குறைந்தபட்ச ஆடையுடன் இருப்பார்களாம். இன்னும் சிலர் நேரம் செல்ல செல்ல இந்த நிர்வாண டைனிங்கில் ஐக்கியமாகி விடுவார்களாம்!

மேலும், உணவகத்தில் வாடிக்கையாளர்கள் மட்டுமே ஆடையின்றி இருப்பார்கள். அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் முழுமையாக ஆடை அணிந்திருப்பார்கள். மேலும், வெளியாட்கள் யாரும் பார்க்க முடியாத வகையில் உணவகத்தின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். விருந்தினர்களின் பிரைவசி கருதி ஜன்னல்களும் கூட மூடப்பட்டு இருக்குமாம் .

வெறுமன ஆடைகள் இல்லாமல் இருப்பது மட்டுமில்லை.. இந்த உணவகத்தில் உணவும் கூட சூப்பராக இருக்குமாம். வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஐந்து வகை உணவுகள் பரிமாறப்படுகின்றன. அதோடு ஷாம்பெயின் டோஸ்ட்டும் வழங்கப்படுகிறது. விருந்தினர்களுக்கு வித்தியாசமான ஒரு டைனிங் அனுபவத்தை தர வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்கிறார் உணவக உரிமையாளர் மௌராத் அலி கூறியுள்ளார்.!

இந்த நிர்வாண டைனிங்கில் சாப்பிட நேராக எல்லாம் ஹோட்டலுக்கு போய்விட முடியாது. இதற்கு விரும்பவுள்ளவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டுமாம். தனியாக வரும் பெண்களுக்கு டிக்கெட் கட்டணம் 150 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.14,300) வசூலிக்கப்படும்.

தனியாக வரும் ஆண்களுக்கு 250 டாலர் (சுமார் ரூ.23,800), தம்பதிகளுக்கு சுமார் 300 டாலர் (ரூ.28,500) வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வினோதம்! என்ன காரணம் விருப்பத்துடன் பாலியல் அல்லது ஆபாசம் இல்லாமல் நிர்வாணமாக இருப்பது தங்களது உடலை பற்றிய தயக்கத்தை குறைக்கவும், சமூக பார்வைகளை மாற்றவும் உதவும் என்கிறார்கள். மேலும், உடல் குறித்த தன்னம்பிக்கை, பாசிட்டிவிட்டியும் அதிகரிக்கிறதாம். மேலும், வாழ்நாளிலேயே இதுபோல உணவு சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள் என்பதும் கூடுதல் பிளஸ்!

அதேநேரம் உலகிலேயே இதுபோன்ற நிர்வாண டைனிங் இதுதான் முதல்முறை என சொல்லிவிட முடியாது. இதற்கு முன்பும் சில இடங்களில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் சில காலப்போக்கில் மூடப்பட்டுவிட்டன. தற்போது இந்த உணவகம் மட்டும் மாதத்திற்கு ஒருமுறை இந்த வித்தியாசமான அனுபவத்தை வழங்கி வருகிறது.

Previous Story

ඇම්බ්ලියුලන්ස් ප්‍රේමදාසගෙ අලුත්ම ආතල් සෙට් එක ඔන්න ආවෝ😂

Next Story

நேபாள  பேரழிவு:மீண்டும் அணை உடைந்தது!